தேர்தல் கூட்டுக்கும் பேரவைக்கும் தொடர்பு இல்லை! - முதலமைச்சர்

ஆசிரியர் - Admin
தேர்தல் கூட்டுக்கும் பேரவைக்கும் தொடர்பு இல்லை! - முதலமைச்சர்

கஜேந்­தி­ர­கு­மார் – சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் இணைந்து உரு­வாக்­கி­யி­ருக்­கும் தேர்­தல் கூட்­டுக்­கும் தமிழ் மக்­கள் பேர­வைக்கும் எந்­தத் தொடர்­பும் இல்லை என்­றும், பேரவை இதற்­குப் இணங்­காது என்­றும், தமிழ் மக்­கள் பேர­வை­யின் இணைத் தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ரும், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­மான சி.வி.விக்­னேஸ்வ­ரன் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

‘‘தமிழ் மக்­கள் பேர­வை­யின் ஆத­ர­வு­டன் அர­சி­யல் முன்­னணி உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் என்று இரண்டு கட்­சி­க­ளின் தலை­வர்­கள் கூறி­யி­ருக்­கின்­றார் களே என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னி­டம் வின­வப்பட்ட போது, ‘‘தமிழ் மக்­கள் பேர­வைக்­கும் இதற்­கும் தொடர்­பில்லை. என்ன விதத்­தில் அவ்­வாறு கூறி­னார் களோ தெரி­ய­வில்லை. என்ன அடிப்­ப­டை­யில் அப்­ப­டிச் சொல்­லி­யுள்­ளார்­கள் என்­பதை நான் அறி­ய­வேண்­டும். ஆனா­லும் தமிழ் மக்­கள் பேரவை இதற்கு இணங்­காது. நான் இது தொடர்­பில் மற்­றொரு இணைத் தலை­வ­ரான மருத்­து­வர் பூ.லக்ஸ்­ம­னு­டன் பேசு­வேன்’’ என்று பதி­ல­ளித்­துள்ளார் முத­ல­மைச்­சர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு