கிளிநொச்சி மாவட்ட செயலா் சுந்தரம் அருமைநாயகம் பாகிஸ்த்தான் செல்கிறாா்..

ஆசிரியர் - Editor
கிளிநொச்சி மாவட்ட செயலா் சுந்தரம் அருமைநாயகம் பாகிஸ்த்தான் செல்கிறாா்..

பொது நிர்வாக அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலா் சு.அருமைநாயகம் உள்ளிட்ட 12பேர் ஒரு வாரா கால பயணமாக நாளைய தினம்  பாகிஸ்தான் நாட்டிற்குப் பயணமாகின்றனர்.

பொது நிர்வாக அமைச்சின் ஏற்பாட்டில் மனிதவலு முகாமைத்துவம் என்னும் விசேட ஆய்வுப் பட்டறை ஒன்றிற்காக அமைச்சின் ஏற்பாட்டில் குறித்த பயணம் இடம்பெறுகின்றது. 

இவ்வாறு இடம்பெறும் சுற்றுப் பயணத்தில் பொது நிர்வாக அமைச்சிற்கு உட்பட்ட 12 அதிகாரிகள் பயணமாகின்றனர்.

இவ்வாறு பயணமாகும் அதிகாரிகளில் மாவட்டச் செயராளர்களாக கிளிநொச்சி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் செயலாளர்களும் ஏனையோர் 

அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 10 பேருமாக நாளைய தினம் புறப்பட்டு எதிர் வரும் 21ம் திகதி நாடு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Radio
×