முதலாம் இடம்பெற்ற மாணவனின் கல்விச்செலவை பொறுப்பேற்றார் சத்தியலிங்கம்!

ஆசிரியர் - Editor II
முதலாம் இடம்பெற்ற மாணவனின் கல்விச்செலவை பொறுப்பேற்றார் சத்தியலிங்கம்!

வவுனியா மாவட்டத்தில் க.பொ.த உயர் தரப்பரீட்சையில் முதலாம் இடம்பெற்ற மாணவனின் கல்விச்செலவை வட மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான ப. சத்தியலிங்கம் பெறுப்பேற்றுள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்ற சுந்தர் சுகிர்தன் என்ற மாணவனின் வீட்டிற்கு சென்ற மாகாணசபை உறுப்பினர் மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ. சந்திரகுமார் ஆகியோர் மாணவனை பொன்னாடை போர்த்தி வாழ்த்தியதோடு மேற்குறித்த வாக்குறுதியினையும் வழங்கினர்.

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவொன்றின் போது புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் இருந்து பொறியியல் மற்றும் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்படம் முதல் மாணவர்களின் கல்வி செலவை பொறுப்பேற்பதாக தெரிவித்திருந்த வாக்குறுதிக்கு அமையவே அவர் குறித்த மாணவனின் கல்விச் செலவை ஏற்றுள்ளார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு