குழந்தை பெற்ற நான்காவது நாள் இளம் தாய் டெங்கினால் மரணம்!

ஆசிரியர் - Admin
குழந்தை பெற்ற நான்காவது நாள் இளம் தாய் டெங்கினால் மரணம்!

குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்த 4 நாள்­க­ளில் இளம் தாய் ஒரு­வர் டெங்­குத் தொற்­றினால் உயி­ரி­ழந்­தார். மீசா­லை­யைச் சேர்ந்த லக்­சன் கீர்த்­திகா (வயது–27) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார். இவர் கிளி­நொச்சி மாவட்ட விவ­சா­யத் திணைக்­க­ளத்­தில் விவ­சா­யப் போத­னா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­று­கின்­றார்.

கீர்த்­திகா1f மகப்­பேற்­றுக்கா யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் கடந்த 21ஆம் திகதி சேர்க்­கப்­பட்­டார். அவ­ருக்கு காய்ச்­சல் ஏற்­பட்­டது. அவ­ருக்கு டெங்­குத் தொற்று ஏற்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டதை அடுத்து கடந்த 25ஆம் திகதி சந்­தி­ர­சி­கிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்­கப்­பட்­டது. 

மருத்­து­வ­னை­யின் அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் அவ­ருக்­குத் தொடர்ந்து சிகிச்­சை­கள் வழங்­கப்­பட்­ட­போ­தும் கீர்த்­திகா நேற்­றுக் காலை உயி­ரி­ழந்­தார். சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர்.

சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் அறிக்கை தாக்­கல் செய்­த­னர். சாவ­கச்­சேரி நீதி­மன்­றப் பதில் நீத­வான் செ.கண­ப­திப்பை பிர­தேச திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி சீ.சீ.இளங்­கீ­ரன் மூலம் விசா­ரணை நடத்தி அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு