SuperTopAds

தமிழகத்தில் கரையொதுங்கியது மன்னார் மாவட்ட படகு, அதில் பயணித்த இரு மீனவர்களுக்கு என்ன நடந்தது?

ஆசிரியர் - Editor I
தமிழகத்தில் கரையொதுங்கியது மன்னார் மாவட்ட படகு, அதில் பயணித்த இரு மீனவர்களுக்கு என்ன நடந்தது?

தமிழகம்- இராமேஸ்வரம் மாவட்டம் சேரன் கோட்டை கடற்பகுதியில் கரையொதுங்கிய படகு மன்னார் பேசா லை பகுதியை சேர்ந்த மீனவர்களுடையது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில்,

குறித்த படகில் பயணித்த இரு மீனவர்களும் எங்கே என தற்போது கேள்வி எழுந்திருக்கின்றது.  தமிழகம் - இராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்பகுதியில் இன்று காலை படகொன்று கரை ஒதுங்கியுள்ளது.

OFRP - A – 2196 MNR என்ற இந்த படகு இலங்கை படகாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்திய மத்திய மாநில உளவு பிரிவு பொலிஸார் சேரான்கோட்டை கடற்பகுதியில் 

கரை ஒதுங்கியுள்ள படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த படகில் மீன்பிடி வலை ஒன்றும்இ மண்ணெண்ணெய் கொள்கலன் இரண்டும்இ சுசுகி இஞ்சின் ஒன்றும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படகு இலங்கையின் மன்னார் மாவட்ட பகுதியில் இருந்து வந்து இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் கரையொதுங்கிய படகு தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை தமிழகம் சேரன்கோட்டை பகுதியில் கரையொதுங்கிய படகு மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமான படகு என, வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 

இந்த படகில் நேற்று மாலை மீனவர்கள் இருவர் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை படகு சேரான்கோட்டை கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது. எனினும் இதில் பயணித்த இரு மீனவர்களும் திரும்பவில்லை 

என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த இருவர் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். மேலும் முடிந்தவரை இந்திய தமிழக மற்றும் மீனவர் தரப்புஇ இவர்களை கண்டு உரிய குடும்பத்திடம் ஒப்படைக்க 

நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.