சபாநாயகா் கருஜயசூாிய தலமையிலான குழு கிளிநொச்சிக்கு திடீா் விஜயம்..
சபாநாயகா் கருஜயசூாிய தலமையிலான குழுவினா் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தி ற்கு விஜயம் மேற்கொண்டு வெள்ள அனா்த்தம் குறித்து ஆராய்ந்துள்ளனா்.
சீரற்ற காலநிலையால் வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையை நேரில் கண்டறிந்து உதவி செய்வதற்காக சபாநாயகர் கரு ஜயசூரிய குறித்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
சபாநாயகருடன் இணைந்து சில அரசியல் பிரதிநிதிகளும் வடக்கிற்கு விஜயம் செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள்
பற்றி ஆராயும் விசேட கூட்டம் ஒன்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,
அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.