கிளிநொச்சி- விசுவமடு இலங்கை வங்கி கிளையில் தீ விபத்து..
கிளிநொச்சி மாவட்டம் விசுவமடுப் பகுதியில் உள்ள இலங்கை வங்கி கிளையில் நேற்று அதிகாலைவேளையில் திடீரெனத் தீ பரவி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
விசுவமடு இலங்கை வங்கி கிளையின் உள்ளே இருந்து புகை வருவதை அவதானித்த அயலில் உள்ள வர்த்தகர்கள் உடனடியாக அது தொடர்பில் வங்கி ஊழியர்களிற்கும்
தகவலை வழங்கினார். காலையில் வருகை தந்த உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வங்கியை திறந்தபோது வங்கி புகை மண்டலமாகவே
சிறிது நேரம் காட்சியளித்தது. உடனடியாக தீ அணைப்பு சேவையின் உதவியும் நாடப்பட்டது. இருந்தபோதும் கிளையில் இருந்த கணனிகள்
உள்ளிட்ட பல பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த தீ முதன் முதலாக காசு எண்ணும் இயந்திரத்தில் இருந்தே பரவியிருக்கலாம் என கருதப்படும்
அதேநேரம் இவ்வாறு தீ பரவலிற்கு மின் ஒழுக்கே காரணமாக இருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்ற நிலையில் தீயிற்கான காரணம் சேதம் தொடர்பில்
உடனடி விசாரணைகள் இடம்மெறுகின்றன. இவ்வாறு இடம்பெறும் ஆரம்ப விசாரணைகளின் பின்னரே தீயிற்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதம்
என்பவை தொடர்பில் தெரிய வரும் எனக் கூறப்படுகின்றது. இதேநேரம் அதிகாலை 5 மணிக்கு தீ பரவிய நிலையில் 8.30 மணியளவிலேயே தீ இணைப்பு சேவை
அந்த இடத்திற்கு வந்த்தாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிதனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
இலங்கை வங்கி கட்டிடத்தில் தீ பரவியுள்ளது அதனால் தீ அணைப்பு சேவையின் உதவி வேண்டும் என்ற கோரிக்கை காலை 7.52ற்கே எமக்கு கோரிக்கை விடப்பட்டது.
அதன் பிரகாரம் 8 .25 ற்கு நான் உட்பட தீ அணைப்பு சேவை அந்த இடத்தில் நின்றோம். அதற்கு முன்பே அங்கே தீ ஓரளவு கட்டுப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் எமக்கு தகவல் கிடைத்தவுடன் நாம் சென்றுள்ளோம். எனப் பதிலளித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் வங்கி மேலதிகாரிகள்
மற்றும் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.