போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கேப்பாபிலவு மக்களை புகைப்படம் எடுத்த மிரட்டிய இராணுவம்..

ஆசிரியர் - Editor I
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கேப்பாபிலவு மக்களை புகைப்படம் எடுத்த மிரட்டிய இராணுவம்..

முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்கள் தமது சொந்த காணிகளை கேட்டு இன்று கவனயீா்ப்பு போரா ட்டம் ஒன்றை நடாத்திய நிலையில் மக்களுடைய நிலத்தில் அடாத்தாக தங்கியிருக்கும் இராணுவ ம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியுள்ளது. 

எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற கோசத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் இன்று காலையிலிருந்து மக்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது இராணுவமே கேப்பாபுலவு மண்ணிலிருந்து உடனடியாக வெளியேறு என்ற 

வாசகம் எழுதப்பட்ட பதாதையை ஏந்தியவாறு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆண்டாண்டு காலமாக தமது பூர்வீக நிலத்தில் வாழ்ந்த மக்கள், சொந்த நிலத்தை தங்களிடம் கொடுக்குமாறு 

இராணவத்தினரிடம் கையேந்தும் நிலையினை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. மாற்றான் நிலத்தை தங்களுக்கு பகிர்ந்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கவில்லை. தங்களின் வரலாற்று நிலத்தையே கேட்கிறார்கள். 

ஆனால், இப்போது வரை அந்த நிலங்களை அம்மக்களிடம் கொடுக்கும் நிலையில் இராணுவத்தினர் இல்லை. முன்னதாக இந்த ஆண்டின் இறுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். 

ஆனால் இந்த ஆண்டு இன்றைய தினம் முடிவடைகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிக்கு என்ன நேர்ந்தது? அவர் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக நாட்டின் முதல் குடிமகனாக தேர்வு செய்யப்பட்டும், 

அந்த மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினையை தீர்க்க முடியாமல் இருக்கிறார் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதேவேளை, தங்கள் நிலத்தினை கையளிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை 

இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும் இன்றைய தினம் புகைப்படங்களாகவும், வீடியோக் காட்சிகளாகவும் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர்களின் ஜனநாயக உரித்தான ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்வதற்கான தேவை என்ன? 

அவர்களின் பாதுகாப்பிற்கு யார் உறுதி வழங்குவார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது? நாட்டில் அமைதியான வழியில் போராடும் மக்களுக்கு இன்னொரு விதத்தில் இராணுவம் அச்சுறுத்தல் கொடுக்கின்றது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இராணுவத்தினர் சிலர் மேற்கொண்டிருந்த குறித்த செயலானது மக்களை அச்சுறுத்தும் வகையில் இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்ட நில மீட்பு போராட்டங்கள் சிலவற்றின் 

போது இராணுவத்தினர் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு