ரயிலுடன் மோதுண்டு 27 வரையான மாடுகள் உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
ரயிலுடன் மோதுண்டு 27 வரையான மாடுகள் உயிாிழப்பு..

முறிகண்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு சுமாா் 27ற்கும் மேற்பட்ட மாடுகள் உயிாிழந்திருக்கி ன்றன. 

தற்போது காலபோக பயிர்ச்செய்கை மேற்கொண்டுள்ள நிலையில் கால்நடைப் பண்ணையாளர்கள் 

தமது கால்நடைகளை பராமரிப்பதில் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஸ்கந்தபுரம் கிளிநொச்சியை

சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர் தனது கால்நடைகளை திருமுறிகண்டிப் பகுதியில் வைத்துப் பராமரித்து வந்த 

சமயம் இன்று பிற்பகல் 5.30 மணிக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரத்தில் மோதுண்டு 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.

இதைவிட, பலமாடுகள் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு