த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினாின் வேண்டுகோளையடுத்து பெருமளவு நிவாரண பொருட்களுடன் கிளிநொச்சி வந்த அமைச்சா்கள்..
கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களுடன் அ மைச்சா்களான சஜித் பிறேமதாஸ மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோா் இன்று கிளிநொச்சி மா வட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனா்.
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மலையாளபுரம் மக்களுக்கு மலையக உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கோரிக்கையை ஏற்ற மலையக உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் கிளிநொச்சிக்கு இன்றைய தினம் விஜயம் செய்திருந்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் அவர்களுக்கு உடனடி உதவிகளையும் இழப்புக்களுக்கான நிவாரணங்களையும் வழங்குமாறு
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அரசின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களை வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் மலையாளபுரம் கிராம மக்களுக்கு மலையாளபுரம் பிள்ளையார் ஆலய முன்றலில் வைத்து
மலையக உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,
கரைச்சிப் பிரதேச செயலாளர் முகுந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோரும் வழங்கி வைத்தனர். மேலும், அமைச்சர் பழனி திகாம்பரத்திடம் மலையாளபுரம் மக்கள் தமது கிராமத்தில் பெருமளவான மக்கள் வசித்து வருகின்றோம்
எமது போக்குவரத்திற்காக ஒரு பேருந்து போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தி உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர் இரண்டு வாரங்களில் அப்பகுதிக்கான போக்குவரத்துச் சேவையை மேற்கொள்வதற்கான
பேருந்துகளை வழங்கி வைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கோரிக்கைக்கு இணங்க கிளி.பாரதி வித்தியாலயத்திற்கு மாணவர்களின் தேவை கருதி பிரதான மண்டபம் ஒன்றினையும்
விரைவில் அமைத்துத் தருவதாக அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் கூறப்பட்டது. இதேபோல் அமைச்சா் சஜித் பிறேமதாஸவும் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தாா் இதன்போது பெருமளவு நிவாரண பொருட்களை அவா் வழங்கியுள்ளதுடன்,
எதிா்வரும் 2019, தை மாதம் 12ம் திகதி தனது பிறந்தநாளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக் களுடன் கொண்டாடுவேன் எனவும் கூறியுள்ளாா்.