ஜ.தே.கவை விமர்சிக்க சராவிற்கு அருகதை இல்லை:விஜயகலா!

ஆசிரியர் - Admin
ஜ.தே.கவை விமர்சிக்க சராவிற்கு அருகதை இல்லை:விஜயகலா!

தனது மகளது பிறந்த தினத்தை கொண்டாட ஜனாதிபதி மைத்திரியை வரவழைத்த சரவணபவன் பெரும்பான்மை கட்சிகள் பற்றி பேச அருகதையற்றவரென ஜ.தே.க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கான செயலமர் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. 

இதில் பங்கேற்று கருத்துரை வழங்கிய சரவணபவன் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தாங்கள் உள்ளூராட்சிகளைப் பிடித்தால் கூடுதலான அபிவிருத்தியைச் செய்யலாம் என்ற மாயையைத் தோற்றுவிக்கின்றனர். 

அதற்கு ஏற்றால் போல், அந்த இரு கட்சியைச் சேர்ந்தோருக்கு தலா 200 கோடி ரூபா வழங்கப்பட்டது. அதனைப் பகிர்ந்தளித்தனர். அந்த நிதியில் வேலை நடந்ததா இல்லையா? என தற்போது அவர்கள் ஆராய்கின்றனர்.

மக்களிடம் நீங்கள் சென்று கதைக்கும் போது மக்களிடம் முக்கியமான கேள்வியை எழுப்பவேண்டும். எங்களுடைய இடம் அழிக்கப்பட்டது யாரால்? என்று கேளுங்கள். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் 9 மாகாணங்களில் கடைசி இடத்தில் வடக்கு மாகாணம்தான் உள்ளது. எங்கு போனாலும் நாம் ஒன்பதாவதுதான். 

ஐக்கிய தேசியக் கட்சியிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலும் தலா ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இங்கு உள்ளனர். அவர்கள் பாலமாகத்தான் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு கொள்கை கிடையாது.

எங்களுக்கு இலக்கு இருக்கின்றது. நாம் அரசியல் பாதையையும் அபிவிருத்திப் பாதையையும் கொண்டு செல்லவேண்டும். இந்தக் கொள்கை தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இல்லை. இதனையும் மக்களிடம் எடுத்துக் கூறுங்கள். எனவே அவர்களைத் தெரிவு செய்தால் எந்தப் பயனும் இல்லை என்று மக்களிடம் நீங்கள் சொல்லவேண்டும்.

இதற்கு மேலால் எமது போராட்டம் எப்படி மழுங்கடிக்கப்பட்டது என்பதையும் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள். அதனை இளைஞர்களுக்கு நினைவுபடுத்துங்கள். பழைய பத்திரிகைகளில் வந்தவற்றை முகநூல்களில் வெளியிடுங்கள். 

கருணா அம்மான் எப்படி வெளியே போனவர்? நாங்கள் எவ்வாறு துரத்தப்பட்டோம்? அநாதைகள் ஆக்கப்பட்டோம்? என்ற விடயங்களை வெளிப்படுத்துங்கள். இது எமது அரசியலுக்கு அவசியமான யுக்தி. இதைத்தான் மகிந்த ராஜபக்ச தொடங்கியிருக்கின்றரெனவும் சரவணபவன் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து விஜயகலா முதலில் சரவணபவன் ஜ.தே.கவில் தான் இருந்தார்.பின்னர் கூட்டமைப்பு பக்கம் பாய்ந்தார்.இப்போதும் அவர் ஜனாதிபதி,பிரதமருடன் பின்கதவால் உறவை கொண்டுள்ளார்.அதனால் தான் அவரது மகளது பிறந்த தினத்திற்கு மைத்திரி வருகை தந்தார்.

சொகுசு வாகனத்திற்காகவும் சலுகைகளிற்காகவும் அங்கு ஒரு முகமும் ஊர்வந்த பின்னர் இன்னொரு முகமும் காட்டுவது அவரது குணத்;தை சந்தேகப்படவைப்பதாகவும் விஜயகலா காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை சரவணபவன் தமிழரசு தலைவர்களை முகநூலில் தாக்குகின்றார்கள். இரண்டு மூன்று பேர்கள்தான் பதிலளிக்கின்றார்கள். உங்களிடம் கேட்கின்ற உரிமை தமிழ் அரசுக் கட்சிக்கு இருக்கின்றது. 

இங்கு உள்ளவர்களில் 50 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் முகநூலில் இருப்பீர்கள். ஆனால் யாரும் உங்களை முகநூல் அறிமுகப்படுத்தவில்லை. தற்போது நீங்கள் அரசியலுக்கு வந்துவிட்டீர்கள். இனி நீங்கள் உங்களை அடையாளப்படுத்தலாம் – அடையாளம் காட்டத்தான்வேண்டுமென அவர் அழைப்பும் விடுத்திருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு