இரணைமடு குளத்தை நம்பியிருந்த நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் கவலையில்..
கிளிநொச்சி- இரணைமடு குளத்தினை அடிப்படை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் இரணைமடு நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் குளத்தின் நீர் வெளியேற்றப்பட்டமையினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.
இரணைமடு குளத்தின் மீன்பிடியை நம்பி சுமார் சுமார் 286 குடும்பங்களை சேர்ந்த நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் மிக நீண்டகாலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இரணைமடு குளத்தின் நீர் மட்டம் சடுதியாக உயர்ந்த நிலையில்,
அண்மையில் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டது. இதனால் சுமார் 1 லட்சம் கிலோவுக்கும் மேற்பட்ட மீன் குளத்திலிருந்து வெளியேறியுள்ளது. இதேபோல் சுமார் 75 ஆயரம் கிலோவுக்கு மேற்பட்ட மீன் பிடிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வளவு மீன்களும் இரணைமடு மீனவர்களால் ஒரு மீன் குஞ்சு 2 ரூபாய் வீதம் வாங்கி விட்டோம், அதற்குமேல் அரசாங்கமும் விட்டது. இந்த மீன் அடுத்த வருடம் இறுதி வரையில் எமது மீனவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குகிறது.
இந்நிலகயில் மீன்கள் பெருமளவில் வெளியேறியுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என உருக்கமாக கூறியுள்ளனர்.