இரணைமடு குளத்தின் நீா் முகாமைத்துவம் தொடா்பில் விசாரணை நடாத்த நியமிக்கப்பட்ட குழுவின் தலைவா் அதிரடியாக நீக்கம்..

ஆசிரியர் - Editor I
இரணைமடு குளத்தின் நீா் முகாமைத்துவம் தொடா்பில் விசாரணை நடாத்த நியமிக்கப்பட்ட குழுவின் தலைவா் அதிரடியாக நீக்கம்..

கிளிநொச்சி-  இரணைமடுகுளம் முகாமைத்துவம் தொடர்பில் விசாரணை செய்யும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட யாழ் பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் அக்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநரால் குறித்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் (29-12-2018) ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் வழங்கிய அறிவித்தல்களுக்கு அமைய இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்( பொறியியல்) எஸ். சண்முகநாதன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவையே ஆளுநர் நியமித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி பெய்த கடும் மழையின் போது இரணைமடுகுளத்தின் நீர் கொள்ளளவு சடுதியாக உயர்ந்த போதும் குளத்தின் வான்கதவுகள் உரிய நேரத்தில் திறக்கப்படாது விட்டதனால் இந்த வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்பட்டது எனத் தெரிவித்து 

அதற்கான விசாரணைகளை முன்னெடுக்கவே இவ் விசாரணை குழுவை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு