கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள பெருக்கினால் 26200 ஏக்கா் நெற்செய்கை அழிவு..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள பெருக்கினால் 26200 ஏக்கா் நெற்செய்கை அழிவு..

கிளிநொச மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் முழுமையான சேத விபரம் பெறுமதி ரீதியில் கணிப்பிட்டு பூர்த்தி செய்து திறைவுறாதபோதும், தற்போதைய தகவல்களின் அடிப்படையில் மட்டும்  சகல தரங்களையுடைய 189    வீதிகள் பாரிய சேதம் 

அடைந்துள்ளதோடு 26ஆயிரத்து 200  ஏக்கர் வயலும் 2 ஆயிரத்து 400 ஏக்கர் ஏனைய பயிர்களும் அழிவடைந்துள்ளதாக மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம்   தெரிவித்தார்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பில் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பிரதமர் தலமையில் இடம்பெற்ற தேவை மதிப்பீட்டுக் கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி  மாவட்டச் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில்  கிளிநொச்சி  மாவட்டத்தில் மட்டும் 22 ஆயிரத்து 504 குடும்பங்களைச் சேர்ந்தோர்   பாதிப்படைந்துள்ளனர். 

விவசாய நடவடிக்கையில் விவசாயம் அழிவடைந்த்தோடு விவசாயம் , மீன்பிடி , கூலித் தொரிலாளலர்கள் என 9 ஆயிரம் பேர் கடந்த ஒரு வாரகாலமாக வேலை வாய்ப்பின்றி உள்ளனர். இதேநேரம்  நிலக் கடலை , உழுந்து , பயறுகள் பல அழிவடைந்துள்ளதோடு  

காய்கறி வகைகள்  ஏனைய விவசாய நடவனிக்கைகளும் முற்றாக மீள் நடுகை செய்ய வேண்டிய நிலமையே ஏற்பட்டுள்ளது.  இதேநேரம்  கால் நடைகளைப் பொறுத்த மட்டில் ஆடு , மாடுகள்   கோழிகளும் அழிவடைந்தும் கணக்கெடுப்பு இடம்பெறுகின்றது.  

உயிரிழந்த கால்நடைகளுடன் நோய் தொற்றும் ஏற்படுமோ  என்ற சந்தேகமும் உள்ளது.  இதேநேரம் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உடனடியாக நில விரிப்புக்கள் கூரைத் தகடுகள் நிவாரணங்கள் வழங்கப்படவேண்டிய தேவை உள்ளது. 

இவற்றினை விட மிக முக்கியமாக 2 ஆயிரத்திற்கும் மேறபட்ட  வீடுகள் சேதமடைந்த அதேநேரம் 61  வீடுகள் முழுமையாக அழிவடைந்தன.   இதேநேரம் இரு வாகணமும்  சேதமடைந்துள்ளதோடு சிறு முயற்சியாளர்கள் , 

சிறு வர்த்தக நிலையங்கள் என்பனவும் அழிவினைச் சந்தித்துள்ளனர். இந்த நிலையில் அழிவுகள் அதிகம் என்பதனால்  கணக்கெடுப்பு நிறைவடையாத நிலையில் அடுத்த வாரம் முழுமை செய்து வழங்கப்படும்.  என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு