இராணுவ நிா்வாகத்தின் கீழ் முன்பள்ளி ஆசிாியா்களாக இயங்க அனுமதியுங்கள்.. முன்பள்ளி ஆசிாியா்கள் கோாிக்கை.

ஆசிரியர் - Editor I
இராணுவ நிா்வாகத்தின் கீழ் முன்பள்ளி ஆசிாியா்களாக இயங்க அனுமதியுங்கள்.. முன்பள்ளி ஆசிாியா்கள் கோாிக்கை.

வடக்கில் படையினரால் பராமரிக்கப்படும் சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழ் ஊதியம் பெறும் முன் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்தும் தம்மை இயங்க அனுமதிக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

முன்பள்ளி ஆசிரியர்களாக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி கடன்களைப் பெற்ற நிலையில். தற்போது திடீரென ஜனவரியுடன் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக 

எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எமது குடும்ப நிலமை கருதி தொடர்ந்தும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். ஏனெனில் வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் எம்மை பணிநீக்கம் செய்ய வேண்டாம். 

ஏனெனில் யாழ்ப்பாணத்தில் 13 முன்பள்ளி ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 322 பேரும் பணியாற்றுவதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் 173 பேரும் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றோம்.

இவ்வாறு பணியாற்றும் எமக்கு 32 ஆயிரம் சம்பளம் பெறும் நிலையில் அதனை நம்பியே  கடனைப் பெற்றோம். எனவே எமக்கான பணியை தொடர்ந்தும் வழங்கி அதே சம்பளத்தை தொடர்ந்தும் வழங்க வேண்டும். 

கூட்டமைப்பினர்  படையினரில் கீழ் இயங்கும் முன்பள்ளிகளை நிறுத்துமாறு கோருகின்றனர். அவ்வாறு நிறுத்துவதனை தடுக்குமாறு கோருவதோடு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினை இயங்க அனுமதிக்க வேண்டும். என்றனர்.

இதேநேரம் குறித்த கவன ஈர்ப்பில் ஈடுபட்டிருந்த முன்பள்ளி ஆசிரியர்களிடம் ஆளுநரிடம் என்ன விடயத்தை கோர வந்தீர்கள் , தொடர்ந்தும் பணியாற்ற முடியாது என யார் தெரிவித்தது , அதனை எதன் அடிப்படைநில் கூறுகின்றனர் 

எனக் கோரியபோது எதுவுமே தெரியாது எனப் பதிலளித்ததோடு தம்மை அழைத்து வந்த முன்பள்ளி இணைப்பாளர்களான ஆண் பணியாளர்களிடம் கோருமாறு தெரிவித்தனர். இதன்போது ஐவர் ஆளுநரைச் சந்தித்து 

தமது கோரிக்கை மனு ஒன்றினை கையளித்த நிலையில் ஆளெநர் ஆசிரியர்களை நேரில் சந்தித்தார்.  இதன்போது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களை கல்வித் மிணைக்களத்தின் 

கீழ் கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனே கோரினார். அதனால் சிறிதரன் , சுமந்திரன் , மாவை சேனாதிராயா ஆகியோருடன் சென்று பேசுங்கள் என ஆரம்பத்தில் கூறியபோது தாம் சிறிதரனுடன் பேசமாட்டோம் என ஆசிரியர்கள் பதிலளித்தனர்.

இதன்போது ஜனாதிபதிக்கு உடன் கடிதம் எழுதி உங்களைத் தொடர்ந்தும் பணியாற்ற ஏற்பாடு செய்து தருகின்றேன். அதற்கு கால அவகாசம் வேண்டும். எனப் பதிலளித்தார். இதேநேரம் ஜனாதிபதி தலமையில் இடம்பெற்ற 

வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்திச் செயலணிக் கலந்துரையாடலில் வடக்கில் படைக் கட்டுமானத்தின் கீழ் இயங்கும் முன்பள்ளிகள் சர்வதேசத்திற்கு தவறான செய்தியையும் வடக்கு மாகாண முன்பள்ளி நியதிச் சட்டத்தை மீறுவதாகவும் 

உள்ளதனால் அவற்றினை கல்வித் திணைக்களத்திடம் ஒப்படைத்தே ஆக வேண்டும். என்ற கோரிக்கையினை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயே முன்வைத்தார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 

அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது , முன்பள்ளி நிர்வாகத்தின் கீழ் பல நூறு முன்பள்ளிகள் உள்ளன. அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களிற்கு கல்வி அமைச்சர் அனுமதிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா மட்டுமே வழங்கப்படும் நிலையில் 

அவர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் சிந்திக்கின்றோம். அதேநேரம் வலயக் கல்வித் திணைக்களங்களினால் நிர்வகிக்கும் முன்பள்ளி ஆசிரியர்கள் க.பொ.த உயர்தரம் அல்லது சாதாரண தரத்தினை முழுமையாக 

பூர்த்தி செய்து தகமை அடிப்படையில் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். ஆனால் படையினரின் முன்பள்ளியில் பணியாற்றும் ஆயிரக் கணக்கான முன்பள்ளி ஆசிரியர்களில் நூற்றுக் கணக்கானோர் 8ம் தரம் கல்வி கற்றவர்களும் 

உள்ளதனால் பாரிய நிர்வாக முரண்பாடு உள்ளது. என்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு