வெள்ள பெருக்கினால் அசுத்தமடைந்த கிணறுகளை துப்புரவு செய்யும் பணியில் களமிறங்கிய இராணுவம்..
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 21ம் திகதி உண்டான கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் அசுத்தமடைந்துள்ள குடிநீா் கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் இராணுவத்தினா் களமிறக் கப்பட்டிருக்கின்றனா்.
குடிநீா் கிணறுகள் வெள்ள பெருக்கினால் அசுத்தமடைந்த நிலையில் மக்கள் குடிநீரை பெறுவதி ல் பலத்த சிரமங்களை எதிா்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில் வெள்ள நீர் கலந்த கிணறு களை துப்பரவு செய்யும் பணியில் கிளிநொச்சியில் உள்ள படையினர்
ஈடுப்பட்டு வருகின்றனர் அந்த வகையில் இன்று படையினரும், கடற்படையினரும் இணைந்து இப் பணியைமுன்னெடுத்தனர். கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வெள்ள நீர் கலந்த மக்கள் பாவணை கிணறுகளை துப்பரவு செய்யம் பணிகளில் காலை முதல்
படையினர் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய முப்படையினரும் பாதிக்கப்ப ட்ட மக்களிற்கு பல்வேறு உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர்.