SuperTopAds

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோா் தொகை 87 ஆயிரத்தை தாண்டியது.. 24 நலன்புாி நிலையங்கள் இயங்கு நிலையில்..

ஆசிரியர் - Editor I
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோா் தொகை 87 ஆயிரத்தை தாண்டியது.. 24 நலன்புாி நிலையங்கள் இயங்கு நிலையில்..

கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 27668 குடும்பங்களாக அதிகரித்துள்ளது என இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றும் கனமழை பெய்துள்ள நிலையில் இரணைமடு குளத்தின் 9 வான் கதவுகள் நேற்று காலை திறக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடமாகாணத்தில் பரவலாக பெய்த கனமழையினால் 

குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து வெள்ள பெருக்கு உருவாகியிருந்தது. இதனால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டு 

தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி நலன்புரி நிலையங்களில் தஞ்சமடைந்திருந்தனர். இதன் பின்னர் நேற்றும் நேற்று முன்தினமும் வெள்ளம் ஓரளவுக்கு வடிந்து சிறிது.. சிறிதாக மக்கள் தமது இருப்பிடங்களுக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் 

நேற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளது. மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று மழை ஓரளவுக்கு குறைந்திருந்தாலும் பூரணமாக விடவில்லை. இதனால் இரணைமடு குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்த நிலையில் 

இரணைமடு குளத்தின் 9 வான் கதவுகள் நேற்றுக்காலை திறக்கப்பட்டது. இதேபோல் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கரியாலை நாகபடுவான் கு ளம் நேற்றய தினம் தொடக்கம் உள்ள அளவில் வான் பாய்ந்து கொண்டிருக்கின்றது. 

குறிப்பாக நேற்று முன்தினம் 1 அடி வான் பாய்ந்து கொண்டிருந்த நிலையில் பல்வராயன்கட்டு- வேரவில் வீதி ஊடாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு 4 கிராமங்களை சேர்ந்த 2700 குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கியிருந்தன. 

அந்த நிலை நேற்றும் நீடித்துள்ளது. நீர் வற்றாமையால் நேற்றும் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது. இவ்வாறான நிலமைகளினால் வடமாகாணத்தில் கன மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இடர் முகாமைத்தவ நிலையத்தின் தகவலின்படி 27668 குடும்பங்களை சேர்ந்த 86751 நபர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களி ன் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று நண் பகல் 12 மணி வரையிலான தரவுகளின் படி 15198 குடும்பங்களை சேர்ந்த, 47578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 25 வீடுகள் பூரணமாக சேதமடைந்துள்ளதுடன், 505 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 8025 குடும்பங்களை சேர்ந்த 25889 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 64 வீடுகள் பூரணமாக சேதமடைந்தள்ளதுடன், 801 வீடு கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

மேலும் மொத்தமாக வடமாகாணத்தில் 89 வீடுகள் பூரணமாகவும், 1308 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்கியிருக்கும் 24 நலன்புரி நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் 12 நலன்புரி நிலையங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 நலன்புரி நிலையங்களும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. என இடர் முகாமைத்துவ நிலையத்தின் தகவல்களில் கூறப்பட்டுள்ளது.