SuperTopAds

இராணுவத்தின் கீழ் இயங்கும் முன்பள்ளி ஆசிாியா்களை பணி நீக்கும்படி நாங்கள் கேட்கவில்லை. ஆனால் சமத்துவம் தேவை..

ஆசிரியர் - Editor I
இராணுவத்தின் கீழ் இயங்கும் முன்பள்ளி ஆசிாியா்களை பணி நீக்கும்படி நாங்கள் கேட்கவில்லை. ஆனால் சமத்துவம் தேவை..

கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் எந்தவொரு முன்பள்ளி ஆசிரியர்களையும் பணியில் இருந்து நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரவில்லை. மாறாக ஒரு பகுதியினருக்கு 32 ஆயிரமும் மறுதரப்பிற்கு 6  ஆயிரம் ரூபாவும் வழங்குவதனை சீர் செய்யும் நடவடிக்கையினையே கோருகின்றோம். 

என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் இயங்கும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கூறியதாக வடக்கு மாகாண ஆளுநர் கூறுவது தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ,

இலங்கையில் கல்வித் தரத்தில் மிக மோசமாக எமது மாவட்டம் பாதிப்படுவதாக சுட்டிக்காட்டும் போது அதற்கு காரணமாக பல காரணம் கூறும் நிலையில் மிக முக்கியமாக இரு காரணம் கூற ப்படுகின்றது. கிளிநொச்சியில் தற்போது பணியில் உள்ள 1100 முன்பள்ளி ஆசிரியர்களில் 322 பேர் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்குபவர்கள். 

இவர்களிற்கு மட்டும் இந்த நாட்டின் அரசினால் 32 ஆயிரம் ரூபா வழங்க முடியுமானால் எஞ்சிய முன் பள்ளி ஆசிரியர்களிற்கு ஏன் அந்த 32 ஆயிரத்தை வழங்க முடியாது என்பதே எமது கேள் வி. சிவில் பாதுகாப்புத் திணைக்களம் 8 வகுப்புடனும் வயதுக் கட்டுப்பாடு இன்றியும் நியமனம் செய்த பின்பு பயிற்சியினை வழங்கி பணியாற்ற அனுமதிக்கலாம் 

னில் க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தரம் சித்தி எய்திய ஆயிரம் ஆசிரியர்கள் மட்டும் 6 ஆயிரத்திற்காக பணியாற்றுவது சரியானதுதானா என்பதனையும் வடக்கு மாகாண ஆளுநர் பதில் கூற வேண்டும். இன்று இந்த 600 பேரிற்கு நியமனத்திற்கு எதிர்ப்பு கூறவில்லை. அதேநேரம் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரம் ரூபாவுடன் மட்டும் நிரந்தரமும் இன்றி , 

ஓய்வூதியமோ அல்லது ஊழியர் சேமலாப நிதிகளோ இன்றி இத்தனை ஆண்டுகளாக பணியாற் றும் 4 ஆயிரம் ஆசிரியர்களும் ஆளுநர் செயலகம் செல்லும் நிலமையை ஆளுநர் உருவாக்குகின் றார்.  எம்மைப் பொறுத்த வரையில் 4 ஆயிரம் ஆசிரியர்களிற்கு ஒரு சட்டமும் 600 ஆசிரியர்களிற்கு ஒரு சட்டமும் நடை முறைப்படுத்த முடியாது. 

அதே நேரம் இராணுவத்தின் துணைப்படைக் கட்டமைப்பின் கீழ் முன்பள்ளிகள் அனுமதிக்க முடியாது 4 ஆயிரத்து 600 ஆசிரியர்களும் கல்வித் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அனைவருக்கும் அரசு நியாயமான வாழ்வாதாரத்திற்கு ஏற்ற ஊதியத்தினை வழங்க வேண்டும். 20 ஆண்டுகளாக வெறும் 6 ஆயிரம் ரூபா சம்பளத்தில் 

பணியாற்றி இன்று நோய்வாய்ப்பட்டு மனவேதனையுடன் வீடு செல்லும் கல்விக்கு அத்திவாரம் இட்டவர்களை தொடர்ந்தும் வீதியில் விட முடியாது. அதேநேரம் இலங்கை முழுவதிலும் உள்ளதாக ஆளுநர் கூறுவாராக இருப்பின் இலங்கை முழுவதிலும் உள்ளது 1154 ஆசிரியர்கள் அதில் 628 பேர் வடக்கு மாகாணத்திலேயே உள்ளது. 

இவ்வாறு மொத்த எண்ணிக்கையின் அரைப் பங்கிலும் அதிகமானது. இதேதான் இராணுவத்தி லும் இடம்பெறுகின்றது. மொத்த இராணுவத்தின் 3இல் 2 பங்கு இங்கேதான் குந்தியுள்ளனர்.  இ ன்று இந்த விடயத்தில் பிரச்சணை வந்தபோது உண்மை  எண்ணிக்கை சர்வதேசத்தின் முன்னாள் வந்துள்ளது. படையினர் தொடர்பில் பிரச்சணை எழும்போது 

உண்மை எண்ணிக்கை அன்று வெளிவரும் அப்போது  நாம் கூறியது உண்மை எனத் தெரிய வரும். என்றார்.