கனமழை மற்றும் வெள்ளத்தினால் உண்டான சேதங்களை மதீப்பீடு செய்யும் பணி நாளை ஆரம்பம். 5 குழுக்கள் நியமனம்..
கிளிநொச்சி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் உண்டான சொத்து அழிவுகள் மற்றும் விவசாய அழி வுகள், வீதிகள், பாலங்கள் குறித்த தகவல்களை திரட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபா் சுந்தரம் அருமைநாயகம் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், வெள் ளம் மற்றும் மழையினால் உண்டான சொத்து அழிவுகள், வீதிகள், பாலங்கள் மற்றும்
விவசாய அழிவுகள், கடற்றொழிலாளா்களுக்கு உண்டான பாதிப்புக்கள் மற்றும் இதர சேதங்கள் குறித்த தகவல்களை சே காிக்கவேண்டியுள்ளது. இதற்கான பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளதுடன்,
இந்த தரவுகளை சேகாிக்கும் பணியில் 5 குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றாா்.