அனா்த்தம் குறித்து பிரதமா் செயலகத்தில் கலந்துரையாடல், நிவாரண பணிகளையும், இழப்பீட்டையும் துாிதப்படுத்துமாறு சி.சிறீதரன் இடித்துரைப்பு..
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்காள் மக்கள் பாதிக்கப்பட்டு இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில்
பிரதமர் செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் அமைச்சின் செயலாளர்கள்
மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை பிரதிநித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் கலந்து கொண்டார் இக் கலந்துரையாடலில் உடனடியாக நிவாரணம் வழங்குதல் மற்றும்
நேற்று இரவில் இருந்து இன்று வரை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண தேவையைப் பூர்த்தி செய்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது
இதேவேளை கிளிநொச்சி முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் முற்றாக அழிவடைந்த அனைத்து மக்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குதல் அதற்கான உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தல் மற்றும் அவர்களுக்கான அழிந்த தற்காலிக வீடுகளை
புனரமைப்பு செய்தல் வெள்ளத்தால் அழிந்த வீதிகள் பாலங்கள் தொடர்பான விவரங்கள் போன்ற விடயங்களில் கலந்துரையாடப்பட்டது ஆதலால் முதலாவதாக அவசரமாக மக்களின் சுகாதாரம் அவருடைய உணவு போன்ற விடயங்கள் தொடர்பில்
அக்கறை செலுத்தப்பட்டு அதற்குரிய நிதி வசதிகளை அரசாங்கத்தின் ஊடாக ஏற்படுத்தி அனைத்து மக்களுக்கும் ஒரு கிழமைக்கு அல்லது இரண்டு வாரங்கள் உலர் உணவுகளை வழங்கி அவர்களுக்கு கிடைக்கச் செய்து அதனூடாக
அவருடைய உள்ளடி நாளாந்த சீவியத்தை உருவாக்கி உடனடியாக அவர்கள் எல்லோருக்கும் முதல் கட்டமாக பத்தாயிரம்(10,000) ரூபா நிவாரண நிதி வழங்குதல் அதனூடாக அவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்தல் தொடர்ந்து
அடுத்தடுத்த கட்டமாக பல திட்டங்களை உருவாக்குதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டது அழிந்து போன வயல் நிலங்கள் மற்றும் விலங்கு வேளாண்மை மற்றும் கடலுக்கு செல்ல முடியாத மீனவர்களின் வாழ்வாதாரம் வாழ்வாதாரங்கள்
பாதிக்கப்பட்ட விவசாய என்று அழிந்து கொண்டிருக்கும் விவசாய நிலங்களுக்கான நஷ்ட ஈடு போன்ற விடயங்களும் உடனடியாக மறுவாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வாழ்வாதார வழங்குதலும் ஆராயப்பட்டது
இவ்விடயம் தொடர்பில் நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் தொடர்ந்து நாளையும் அரசாங்க அதிபர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய இது தொடர்பான அவசர கலந்துரையாடல் இடம்பெற
உள்ளது தொடர்ந்து நிவாரண கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக வாக்குறுதி அளிக்கப்பட்டது