சொந்த வீடுகளுக்கு திரும்பும் மக்கள்.. தமது வீடுகளை பார்த்து கண்ணீர் சிந்தும் பரிதாபம்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங் கியிருந்த மக்கள் சிறிது.. சிறிதாக தமது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மழை குறைந்துள்ளதுடன், இரணைமடு குளத்தின் வான் கதவுகளும் இன்றுடன் பூட்டப் பட்டுள்ளது. இதேவேளை மக்களுடைய குடியிருப்புக்குள் தேங்கியிருந்த
வெள்ளமும் குறைந்துவரும் நிலையில் மக்கள் தமது சொந்த வீடுகளுக்கு சென்று அங்கு துப்புரவு பணிகளை செய்து வருகின்றனர். வீடுகளை இழந்த மக்களும், வீடுகள் சேதமடைந்த மக்களும்
செல்வதற்கு இடமில்லாமல் முகாம்களிலேயே தங்கியிருக்கவேண்டியுள்ளது. இதேவேளை வெள்ள பாதிப்புக்குள்ளான தமது வீடுகளை பார்க்கும் போது கண்ணீர் வருவதாக கூறும் மக்கள்,
இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட நாட்கள் செல்லும் எனவும் கூறுகின்றனர்.