பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு, நிவாரண பணிகளை துரிதப்படுத்துங்கள் அதிகாரிகளுக்கு பிரதமர் அதிரடி உத்தரவு..
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உத விகளை வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும்.
மேற்கண்டவாறு கூறியிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள் ள மக்களுக்கு நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும்
அரச அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு இழப்புக்களை சந்தித்திருக்கும் நிலையில் அவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க நிதி அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுக்கும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.