வடமாகாணத்தில் வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்டவா்களின் தொகை 70 ஆயிரத்தை தாண்டியது..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்டவா்களின் தொகை 70 ஆயிரத்தை தாண்டியது..

வெள்ளப் பெருக்கு மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் 22624 குடும் பங்களை சேர்ந்த 72453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக வடக்கின் 5 மாவட்டங்களிலும் கனமழையினால் குளங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்தது. இதனால் பாரிய குளங்கள் உள்ளிட்ட சகல குளங்களில் இருந் தும் மேலதிக நீர் வெளியேறியதுடன், தொடர்ச்சியாக கனமழையும் பெய்தமையினால் மக்களின் குடியிருப்புக்களுக்குள் வெள்ள நீர் புகுந்து. இதன்

காரணமாக பெருமளவு மக்கள் தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேறவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருந்தது. இந்நிலையில் நேற்றும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில் பாதிப்புக்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளது. இந்நிலையில் இடர்முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்ப

ட்ட நேற்று நண்பகல் 12 மணி வரையிலான தரவுகளின் படி 5 மாவட்டங்களிலும் சுமார் 22624 குடும்பங்களை சேர்ந்த 72453 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் 5 மாவட்டங்களிலும் சுமார் 35 இடத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 3297 குடும்பங்களை சேர்ந்த 10342 மக்க

ள் தங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளதுடன், மேலும் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் காட்டப்பட்டுள்ளன. இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் 11688 குடும்பங்களை சேர்ந்த 38534 மக்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6520 குடும்பங்களை சேர்ந்த 20

731 மக்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4257 குடும்பங்களை சேர்ந்த 12642 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் வடமாகாணத்தில் 10 வீடுகள் முழு மையாக சேதமடைந்துள்ளன. அவற்றில் 7 வீடுகள் கிளிநொச்சி மாவட்டத்திற்குரியவை, அதே போல் 226 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.

அவற்றில் 221 வீடுகள் கிளிநொச்சி மாவட்டத்திற்குரியவை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல் யாழ்.மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவும், கிளிநொச்சி மாவ ட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப் பு பிரதேச செயலர் பிரிவும் அதிகளவில் பாதிக்கப்பட்டு

ள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு