வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவு ஆறுதலளித்த அமைச்சரின் செய்தி..
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழ ப்பீடு வழங்குவதற்காக இரு மாவட்ட செயலகங்களும் கோரிய நிதியை வழங்குவோம்.
மேற்கண்டவாறு பொதுநிர்வாகம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மேற்படி இரு மாவட்டங்களினதும் அனர்த்த நிலமைகள்
குறித்து கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
வெள்ளம் அனர்த்தம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளோம்இ பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகள் மற்றும் அவசர உதவிகள் குறித்த கலந்துரையாடப்பட்டது.
இதன் போது மக்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும் அதற்கான நட்டஈடுகள் வழங்கப்படும். அதற்காக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்கள்
கோருகின்ற நிதி விடுவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த உதவிகள் அனைத்தும் விரைவாக வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.