நிவாரண பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் மதுபோதையில் குழப்பம் விளைவித்த கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்..
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மது போதையில் குழப்பம் விளைவித்த கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில்இ கண்டாவளை மகாவித்தியாலயத்தில் தங்கியிருந்த குடும்பங்களுக்கான அத்தியவசியப் பொருட்களை வழங்கசசென்ற
பிரதேச செயலாளர் உதவிபபிரதேச செயலாளர், உத்தியோகத்தர்களை கரைச்சிப்பிரதேச சபையின் உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் மதுபோதையில் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து பிரதேச செயலக வாகனங்களை தடுத்து நிறுத்தியமை
தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 3.00ம ணியளவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கபபட்டுள்ள
நலன்புரிநிலையங்கள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு பகலாக கண்டாவளைப்பிரதேச செயலாளர் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர்இ பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்இ தமது சேவைகளை மக்களுக்கு வழங்கிவரும்
அதேநேரம் கிடைக்கப்பெறுகின்ற உதவிப்பொருட்களை பகிர்தளிக்கின்ற நடவடிக்கைகளிலும் துரிதமாக செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை முதல் (23) நாகேந்திரபுரம் வித்தியாலயம்; முரசுமோட்டை முருகானந்த ஆரம்பப்பாடசாலை
முருகானந்தக்கல்லூரி கண்டாவளை மகாவித்;தியாலயம் ஆகிய நலன்புரிநிலையங்களில் தங்கியிருந்த மக்களுக்கான உதவிபபொருட்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் கிளிநாச்சி கண்டாவளை மகாவித்தியாலயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென பல்வேறு அமைப்புக்களாலும் வழங்கப்ட்ட பெருந்தொகையான குழந்தைகளுக்கான பால்மாஇ பிஸ்கற்இ போன்ற உடனடித்தேவைக்குரியபொருட்களை
நேற்றிரவு (23) 9.45 மணியளவில் பிரதேச செயலர் மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள்இ கிராம அலுவலர் மற்றும் பொருளாதார உத்தியோகத்தர்கள் ஆகியோர் பொருட்களை மக்களுக்கு விநியோகித்துக்கொணடிருந்தனர்.
அதன் போது இ நலன்புரிநிலையத்திற்குள் மதுபோதையில் சென்ற கரைச்சிப்பிரதேச சபையின் உறுப்பினர் உள்ளிட்;ட குழுவினர் பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தரிடம் பொருட்களை வழங்கமுடியாது என்றும் தடுத்து தகாத வார்த்தைப்பிரயோககங்களையும் மேறகொண்டனர்.
இதனையடுத்துஇ பொருட்களை வழங்கி விட்டு அலுவலகத்திற்கு திரும்பிய பிரதேசசெயலர்; மற்றும் உத்தியோகத்தர்கள் பயணித்த வாகனத்தை செல்லவிடாது தர்க்கப்பட்டதுடன்இ கண்டாவளை கமக்கார அமைப்புக்குச்சொந்தமான
உழவுஇயந்தையும் வீதியில் நிறுத்தி இரண்டு வாகனத்தையும் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து சுமார் 1.30 மணிநேரம் இவ்வாறு பிரதேச செயலர் மறிக்கப்பட்டதைதடுத்து சம்பவ இடத்திற்கு
பொலிஸாரின் உதவியுடன் பிரதேச மற்றும் உத்தியோகத்தர்கள் அங்கிருந்து வெளியேறினர். இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பிரதேச செயலர் மற்றும் உத்தியோகத்தர்கள்
கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.