விக்னேஸ்வரனுக்கு விரைவில் பதிலடி கொடுப்பாராம் சம்பந்தன்!

ஆசிரியர் - Admin
விக்னேஸ்வரனுக்கு விரைவில் பதிலடி கொடுப்பாராம் சம்பந்தன்!

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­மையை கடு­மை­யா­கச் சாடி நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட அறிக்­கைக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் பதி­லடி கொடுக்­கத் தீர்­மா­னித்­துள்­ளார் என்று கூறப்படுகிறது. பதி­லடி அறிக்கை விரை­வில் வெளி­யி­டப்­ப­டும் என்று கூட்­ட­மைப்பு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­மை­யைக் கடு­மை­யா­கச் சாடி வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்று முன்­தி­னம் அறிக்கை வெளி­யிட்­டி­ருந்­தார். தான் எந்­த­வொரு கட்சி சார்ந்­த­வன் அல்ல என்­றும், கட்­சித் தலைமை தன்­னைக் கட்­டுப்­ப­டுத்த முனை­கின்­றது என்­றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இந்த அறிக்­கைக்­கான பதிலை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தனே வெளி­யி­டு­வார் என்று கூறப்­ப­டு­கின்­றது. முத­ல­மைச்­ச­ரின் அறிக்­கை­யால் கடும் கோப­ம­டைந்­துள்ள இரா.சம்­பந்­தன் விரை­வில் பதி­லடி அறிக்கை வெளி­யி­டு­வார் என்­றும், கட்­சி­யில் உள்ள ஏனை­யோர் இது தொடர்­பில் ­ப­தி­ல­ளிக்கமாட்­டார்­கள் என்­றும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு