SuperTopAds

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீட்பு பணிகளில் அளப்பரிய பங்காற்றிய இராணுவம், கடற்படை..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீட்பு பணிகளில் அளப்பரிய பங்காற்றிய இராணுவம், கடற்படை..

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவம் அதியுச்ச சேவையினை மேற்கொண்டு வருவதாக இராணுவ தலமையம் தெரிவித்து ள்ளது. 

இப்பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கான பிரதேசங்களான இரத்தினபுரம், ஆனந்தபுரம், கனகாம்பிகை குளம், மரதனகர், தர்மபுரம், புளியங்பொக்கனை, பரந்தன், குடியிருப்பு உரியன், கன்டாவளை, மாங்குளம், மணக்கண்டல்,

கவலக்கண்டை, கொடைகலு, கஜங்கரத்னபுரம், விடியபுரம், உடையார்கட்டு, குருவில்குளம் போன்ற பிரதேசங்களில் இந்த அனர்த்த பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு ள்ளன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது தலைமையில்

 கிளிநொச்சி பிரதேசங்களில் 7 ஆவது இலேசாயுத காலாட் படையணிஇ 9 ஆவது விஜயபாகு காலாட் படையணி 1 ஆவது சிங்கப் படையணி 15 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த 230 படை வீரர்களது 

பங்களிப்புடன் இந்த அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கிளிநொச்சி படையினரால் சனிக் கிழமை ஓலுமடு மற்றும் புளிமுச்சுன்னாகுளங்களில் ஏற்பட்ட நீர்வீழ்ச்சி வெளியேறுவதை தடுக்கும் முகமாக

574 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 3 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த 47 இராணுவத்தினரது பங்களிப்புடன் அனைக்கட்டுகள் இட்டு இந்த நீர்வீழ்ச்சியை தடுக்கும் முகமாக செயற்பட்டனர்.

அன்றைய தினமே முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது வழிக்காட்டலின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மணக்கண்டல்இ கவலாக்கண்டல்

கோடைக்களு, கேஜனகரத்னபுரம், வித்யாபுரம், உடையார்கட்டு, குருவில்குளம் பிரதேசங்களில் இராணுவத்தினரால் இந்த அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

(இராணுவ ஊடக பிரிவு)