SuperTopAds

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை.. பாதிப்புக்கள் மேலும் அதிகரிக்கும் அபாயம்.

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை.. பாதிப்புக்கள் மேலும் அதிகரிக்கும் அபாயம்.

வடமாகாணத்தில் நிலவிய கனமழையுடன் கூடிய காலநிலை தணியும் என வானிலை அவதான நிலையம் அறிவித் திருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்றது. 

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துள்ளது. இதனால் குளங்களில் நீர் மட்டம் உயர்ந்து வான் கதவுகள் திறக்கப்பட்டன. மேலும் சில குளங்கள் உடைத்தன. 

இதனால் பெருமளவு மக்கள் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு தற்போதும் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 40 அடியை எட்டிய நிலையில்,

வான் கதவுகள் திறக்கப்பட்டமையால் பெரும் வெள்ளப் பாதிப்பு உருவானது. இந்நிலையில் நேற்றய தினம் முல் லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் மழைவீழ்ச்சி குறைந்தமையினாலும், 

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 36 அடிக்கு வந்தமையாலும் வான் கதவுகள் பூட்டப்பட்டன. இந்நிலையில் இன் று காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்றது. 

இந்த மழை தொடர்ந்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிப்புக்கள் மேலும் அதிகரிக்கவுள்ளதுடன், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தின் நீர் மட்டமும் உயரும். 

இதனால் மீண்டும் வான் கதவுகள் திறக்கப்படும் பட்சத்தில் முன்னதாகவே பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியிருக்கின்றது.