வடமாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56867 ஆக உயர்வு..
வடமாகாணத்தில் வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 17559 குடும்பங்களை சேர்ந்த 56867 பேராக காணப்படுகின்றது.
அவர்களில் 4 ஆயிரத்து 398 குடும்பங்கள் 58 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள் ளனர். வடக்கு மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும்
கன மழை பெய்தது. அதனால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ் கின. அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர்.
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் மக்கள் இடர்களை எதிர்கொண்ட னர். வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 889 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 808 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
அவர்களில் 2 ஆயிரத்து 765 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 201 பேர் 22 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
என்று கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 ஆயிரத்து 254 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 841 பேர்
பாதிப்படைந்துள்ளனர். அவர்களில் ஆயிரத்து 631 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 765 பேர் 22 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
என்று முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குடாநாட்டில் 278 குடும்பங்களைச் சேர்ந்த 708 பேர் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்துள்ளனர்
என்று யாழ்ப்பா ணம் மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இடைத்தங்கல் முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான உடனடி உதவிகள்
இடர் முகாமைத்துவ நிலையத் தாலும், பொது அமைப்புக்களாலும், தன்னார்வத் தொண்டர்களா லும் வழங்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கான உடனடி உதவிகளை வழங்குங்கள் என்று அரச தலைவர் மைத்திரி பால சிறிசேனவும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.