SuperTopAds

இடர்முகாமைத்துவ அமைச்சர் நாளை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம்..

ஆசிரியர் - Editor I
இடர்முகாமைத்துவ அமைச்சர் நாளை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம்..

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் உண்டான பாதிப்புக்கள் குறி த்து ஆராய்வதற்காக இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நாளை இரு மாவட்டங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார். 

கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழையையடுத்து வடக்கின் ஐந்து மாவட்டங்களும் வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளாகின. குளங்கள் நிரம்பி வான்பாய தொடங்கிதையடுத்துஇ கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் 

பேரனர்த்தத்தை சந்தித்தன. இரண்டு மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 44000 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிற்கு மாவட்ட செயலகமும்இ இராணுவமும் சமைத்த உணவுகளை வழங்கி வருகிறது.

இந்தநிலையில் இன்று காலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இந்த விடயத்தில் விசேட கவனமெடுக்க வேண்டுமென்றும்

 நிவாரணம் மற்றும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியது. இதையடுத்துஇ நாளைய தினம் (24) அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிற்கு நேரில் விஜயம் செய்துஇ நிவாரண நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.