கிளிநொச்சி மாவட்டத்தில் நன்னீா் மீன்பிடியை நம்பியிருக்கும் மக்களின் இன்றைய நிலை இதுதான்..
கிளிநொச்சி மாவட்டத்தில் கனமழையினால் குளங்கள் நிரம்பி வான் பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் குளத்தில் நன் னீா் மீன்பிடியை நம்பியிருக்கும் மீனவா்கள் குளத்திற்குள் இறங்க முடியாத நிலையில் வான் பாயும் பகுதிகளில் நின்று மீ ன் பிடிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் விவசாயத்தையும், நன்னீா் மீன் பிடியையும் அடிப்படை வாழ்வாதாரமாக கொண்ட பெருமளவு மக்கள் வாழும் மாவட்டமாகும். கடந்த சில நாட்களாக கிளிநொச்சி மாவட்ட த்தில் கனமழை செய்த நிலையில் பொிய நீா்ப்பாசன குளங்கள் யாவும் வான் பாய தொடங்கியு ள்ளது.
இதனால் அந்த குளத்தில் நன்னீா் மீன்பிடியை நம்பியிருக்கும் மக்கள் குளத்திற்குள் இறங்க முடி யாத நிலை உருவாகியிருக்கின்றது. இந்நிலையில் இரணைமடு, அக்கராயன், முத்துஐயன்கட்டு, கல்மடு, போன்ற பாாிய குளங்களில் மக்கள் வான்பாயும் பகுதிகளில் வலைகளை வீசியும், துா ண்டில்களை வீசியும் மீன் பிடித்து வருகின்றனா்.
ஒருபக்கம் பாாிய வெள்ள அா்த்தத்தினை உண்டாக்கி மக்களை பாதித்திருந்தாலும், இந்த குளங் கள் மறுபக்கம் மக்களுக்கு நன்மைகளையும் செய்கின்றன.