வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பாாிய உதவி திட்டம் ஒன்றை வழங்க தயாராகும் யாழ்.வணிகா் கழகம்..
கிளிநொச்சி- முல்லைத்தீவு மாவட்டங்கள் உள்ளடங்கலாக வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலு ம் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவி திட்டங்களை வழங்க யாழ்.வணிகா் கழகம் நடவ டிக்கை எடுத்திருக்கின்றது.
கனமழை, மற்றும் குளங்கள் திறக்கப்பட்டமையினால் குடிமனைகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் பெருமளவு மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனா். அவா்களுக்குத் தேவையான உதவி திட்டங்களை பல்வேறு தரப்பினரும், வழங்கி வருகின்றபோதும் அவை போது மானதாக இல்லை.
இந்நிலையில் யாழ்.வணிகா் கழகம் யாழ்ப்பாண வா்த்தா்களுடன் இணைந்து பாாியளவிலான உ தவி திட்டம் ஒன்றை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக யாழ்.வணிகா் சங்கத் தலைவா் இ.ஜென க்குமாா் தொிவித்துள்ளதுடன், யாழ்ப்பாண வா்த்தகா்களுக்கு வணிகா் சங்கம் ஊடாக அறிவித்த ல் வழங்கப்பட்டுள்ளது.
அந்த அறிவித்தல் கிடைக்காத வா்த்தகா்கள் நாளை திங்கள் கிழமை யாழ்.வணிகா் கழகத்தில் தமது உதவிகளை ஒப்படைக்கலாம். இதேபோல் உதவிகளை வழங்கவுள்ள பொதுமக்களும் யா ழ்.மானிப்பாய் வீதியில் உள்ள வணிகா் கழகத்தில் பொருட்களை ஒப்படைக்கலாம். என வணி கா்கழக தலைவா் மேலும் கேட்டுள்ளாா்.