வெள்ளத்தில் சிக்கியுள்ள புளியம்பொக்கணை மக்களின் போக்குவரத்திற்கு எரிபொருள் தேவை..(படங்கள் இணைப்பு)
புளியம்பொக்கணை நாகேந்திரா வித்தியாசாலையில் 500 வரையான பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உணவு மற்றும் குடிதண்ணீர் என்பன வெளியிடங்களில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு வழங்கப்படுகின்றன.
இக்கிராமத்திற்கும் வெளியிடங்களுக்குமான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வள்ளங்கள் மற்றும் உழவியந்திரங்கள் மூலமாகவே போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
இப்பிரதேசத்தில் உள்ள மூன்று உழவியந்திரங்கள் சேவையில் ஈடுபடுகின்ற போதிலும் அதற்கான எரிபொருளுக்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
எவராவது எரிபொருள் விநியோகித்தால் பெரும் உதவியாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பாடசாலையில் கிராம சேவையாளரும் சமுர்த்தி.உத்தியோகத்தரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.