SuperTopAds

நோயை குறைக்கும் வைட்டமின் உணவுகள்...

ஆசிரியர் - Admin
நோயை குறைக்கும் வைட்டமின் உணவுகள்...

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் வைட்டமின்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவை நிறைந்திருக்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம். வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு ரத்தத்தில் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்யும். நோய் பாதிப்பின்போதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகை செய்யும். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை பழம், ஸ்ட்ராபெர்ரி, ப்ராக்கோலி, கீரை, தக்காளி போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. அத்தகைய உணவுகளை முறையாக சாப்பிட்டு வருவதன் மூலம் ஆரோக்கிய வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.

* வைட்டமின் பி6, பி 12 ஆகியவைகளும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவை. வைட்டமின் பி 12 மாமிச உணவு வகைகளில் அதிகமாக இருக்கும். அசைவ பிரியர்கள் முட்டை, இறைச்சி, மீன் வகைகளை ருசிக்கலாம். பால் மற்றும் பால் பொருட்களிலும் பி 12 சத்து இருக்கிறது. அவை நோய் தடுப்பு ஊக்க மருந்தாக செயல்படும். தானிய வகைகள், பச்சைக்காய்கறிகளில் பி 6 சத்து உள்ளது.

* வைட்டமின் ஈ, நோய் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவும். பல்வேறு வகை பாக்டீரியாக்கள், வைரஸ்களை எதிர்த்து போராடி வலிமையான நோய் எதிர்ப்பு அமைப்பை உருவாக்குவதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பு அணுக்கள் உருவாக்கத்திற்கும் உதவுகிறது. பாதாம், வேர்க்கடலை, சோயா எண்ணெய், கோதுமை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றிலும் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது.

* ஆப்பிள் வினிகரையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக பராமரிக்க உதவும்.

* உடலில் இருந்து நச்சுத்தன்மையை அகற்றுவதற்கு சீரான இடைவெளியில் தண்ணீர் பருகி வருவது அவசியமானது. அதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

* பூண்டுவை சமையலில் சேர்த்து வருவதும் நோய் தொற்றை எதிர்த்து போராட உதவும். இஞ்சியையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* 6 முதல் 8 மணி நேரம் தூங்கும் வழக்கத்தை முறையாக கடைப்பிடித்து வருவதும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.