வடக்கில் யானைகள் தொல்லை அதிகாிக்க காரணம் இதுதான். திட்டமிட்டு நடக்கும் சதிவேலை..

ஆசிரியர் - Editor I
வடக்கில் யானைகள் தொல்லை அதிகாிக்க காரணம் இதுதான். திட்டமிட்டு நடக்கும் சதிவேலை..

மின்னேரியாவில் இருந்து வனவளத் திணைக்களத்தினரால் கனரக வாகனங்களில் ஏற்றிவர ப்பட்ட யானைகள் சில நெடுங்கேணிப் பகுதிக் காட்டில் இறக்கிவிடப்பட்டுகின்றமை தொடர்பில் எவருமே கண்டுகொள்வது கிடையாது. என நெடுங்கேணிப் பகுதி கமக்கார அமைப்பினர் கவலை தெரிவிக்கின்றனர்.

நெடுங்கேணிப் பகுதியில் போரிற்கு முன்பும் யானை வந்தபோதும் ஒரு சில யாணைகள் மட்டுமே நடமாடியது. அதேநேரம் போர்க் காலத்தில் நெடுங்கேணியில் 4ற்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன. இந்த நிலையில் போர் முடிவுற்று சொந்த இடம் திரும்பிய காலத்தில் மாதம் ஓரு முறை அல்லது இரு முறையானைகள் வந்தபோதும் அவை விரட்டப்பட்டது.

அவ்வாறு மக்கள் நடமாட்டம் அற்ற காலத்திலேயே ஒரு சில யானைகளின் நடமாட்டம் கண்ட எமது பகுதியில் இன்று யானைகள் தொல்லை இல்லாத நாளே கிடையாது என்ற நிலமைக்கு வந்துவிட்டது. அதேநேரம் ஒரே நாளில் பல திசைகளிலும் யானைகள் படையெடுப்பதனால் பெரும் அச்சமாகவே உள்ளதோடு பயன்தரு மரங்கள் எவையும் நாட்டமுடியவில்லை. 

இவ்வாறு யானைகள் அதிகரித்தமை தொடர்பில் நாம் பிரதேச செயலகம் , மாவட்டச் செயலகம் , பொலிசார் , வனவளத் திணைக்களம் , வனஜீவராசிகள் திணைக்களம் என தொடர்புபட்ட சகலருக்கும் தெரியப.படுத்தியதோடு யானை வேலிகள் கேட்டும் எந்தப் பயனும் கிடையாது. இதனால் யானை அதிகரிப்பிற்கான காரணத்தை தேடினோம். 

அதன் பிரகாரம் மின்னேரியா பகுதியில் உள்ள வனவளத் திணைக்களம் , வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அப்பகுதி மக்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக அங்கே மக்கள் குடியிருப்பினை நெருங்கும் யானைகள் பிடிக்கப்பட்டு தட்டு ஊர்திகளில் ஏற்றி வரப்படுகின்றன.

அவ்வாறு கொண்டுவரப்பட்ட யானைகளில் இதுவரை 12 யானைகள் நெடுங்கேணிப் காட்டுப் பகுதியில் இறக்கப்பட்டதாக மின்னேரியா அலுவலகத்தில் பணியாற்றும் ஓர் அலுவலர் தகவல் தெரிவித்ததோடு கடந்த வாரமும் ஓர் யானை கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கொண்டுவரப்படும் யானைகள் மின்னேரியாவில் இருந்தே இரவு 10 மணிக்குப் பின்பே புறப்பட்டு அதிகாலை இரண்டு  மணி அல்லது 3 மணியளவில் அதிகாலை வேளையில் மக்கள் நடமாட்டம் அல்லாத நேரத்தில் இறக்குவதனால் மக்களினால் தடுக்கவும் முடியவில்லை. 

எனவே இதனை தடுப்பதற்கு உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால் தொடர் காவல் புரிந்து யானை ஏற்றிவரும் பார ஊர்தி மடக்கிப் பிடிக்கப்படும். அவ்வாறு பார ஊர்தி பிடிக்கப்படும்போது இந்த திணைக்கள அதிகாரிகள் எவரும் இத் திசையில் சமூகமளிக்க 

முடியாத நிலமையை தோற்றுவிப்பதனைத் தவிர எமக்கு வேறு மார்க்கம் தெரியவில்லை. ஏனெனில் நெடுங்கேணியில் மட்டும் இந்த போரின் பின்னர் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை , பப்பாசி , வாழை என எவற்றினையும் விட்டுவைக்கவில்லை. என்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு