முல்லைத்தீவு மாங்குளத்தில் 360.1 மில்லி மீற்றா் மழை வீழ்ச்சி பதிவு, வடமாகாணத்தில் இதுவே அதிகூடிய மழை வீழ்சி என்கிறது வானிலை அவதான நிலையம்..
இலங்கைக்கு தென்கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக வடக் கில் மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள வளிமண்டளவியல் திணைக்கள பொறுப்பதி காரி பிரதீபன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியிலேயே அதிகளிவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவா் கூறுகையில்,
இன்றைய வானிலையைப் பொறுத்தவரையில் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதிகளில் மழையுடன் கூடிய வானிலை காணப்படுமென நாம் ஏற்கனவே அறிவித்ததன் பிரகாரம் நேற்று பல இடங்களிலும் பலத்த மழை வீழ்ச்சி கிடைக்கப் பெற்றுள்ளது. அதே போன்று இன்றும் பலத்த மழை வீழ்ச்சி பல இடங்களிலும் பதிவாகியுள்ளது.
வடக்கு மற்றும், வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய நிலைமை காணப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வாறான நிலைமைகள் காணப்படுகின்றது. ஆகவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில்
பலத்த காற்றும் வீசக் கூடும். ஆகவே இடியுடன் கூடிய மழை, காற்று ஏற்படுமென்பதால் பொது மக்கள் இடிமின்னல் தாக்கங்களில் இருந்து ஏற்படும் தாக்கத்தை தவிர்ப்பதற்காக முன்னேற்பா ட்டு நடவடிக்கைகளை மேறகொள்ள வேண்டும். நேற்று 21 ஆம் திகதி காலை 8.30 மணி தொ டக்கம் இன்று 22 ஆம் திகதி காலை 8.30 மணி வரை
பதிவாகிய மழை வீழ்ச்சியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியிலேயே 360.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதே போன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரிப் பிரதேசத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 89.3 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஆணையிறவுப் பிரதேசத்தில் 220.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும்
அதிகளிவில் பதிவாகியுள்ளன. இதற்கமைய அச்சுவேலியில் 70.4 மில்லி மீற்றரும், பருத்தித்துறைப் பகுதியில் 74.8 மில்லி மீற்றரும் நயினாதீவுப் பபுகுதியில் 44.3 மில்லி மீற்றரும், முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பகுதியில் 158.2 மில்லி மீற்றரும் மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதுpயில்195.3 மில்லி மீற்றரும்
யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் 36.7 மில்லி மீற்றரும் நெடுந்தீவுப் பிரதேசத்தில் 40.9 மில்லி மீற்றரும், கிளிநொச்சி இரணைமடுப் பிரதேசத்தில் 237.3 மில்லி மீற்றரும் ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் 301 மில்லி மீற்றரும் ஆணையிறவுப் பிரதேசத்தில் 220.1 மில்லி மீற்றரும் சாவகச்சேரிப் பிரதேசத்தில் 89.3 மில்லி மீற்றரும்
யாழ்ப்பானம் கச்சேரிப் பகுதியில் 59.8 மில்லி மீற்றரும்யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் 69.3 மில்லி மீற்றரும் பதிவாகியுள்ளது. இதேவேளை வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் தளம்பல் நிலை தொடருவதால் இன்றும் மழை தொடருமெனவும்
நாளை குறையுமன்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே பொது மக்கள் அவதானமாக முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் கேட்டுள்ளது.