கிளிநொச்சி- கனகராயன் ஆற்றுப் படுகையில் உள்ள கிராம மக்களுக்கு எச்சாிக்கை..
கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கான நீா் வரத்தும் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொ ண்டிருக்கும் நீாின் அளவும் சமமாக இருக்கும் நிலையில் கனகராயன் ஆற்றுப் படுகையில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு எச்சாிக்கப்பட்டுள்ளனா்.
இன்று காலையில் இருந்து இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டாலும் இதுவரை அரை இஞ்சி மட்டுமே குறைந்துள்ளது வெளியேறுகின்ற நீரின் அளவும் வருகின்ற நீரின் அளவும் இதில் இதுவரை ஒரே அளவில் இருப்பதனால்
நீர்மட்டத்தை குறைப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகிறது அதனைவிட நீர்மட்டத்தை குறைந்தது 3அடி குறைக்க வேண்டிய தேவை இருக்கின்றது இன்று இரவு மழைவீழ்ச்சி இல்லாது போனால் நீர்மட்டத்தை குறைப்பதற்கு மூன்று நாட்கள் தேவை
ஆனாலும் மழை தொடருமானால் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் தொடர்ந்து பாயும் என நீர்ப்பாசனத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றது மேலும் பாரிய அனர்த்தங்கள் எதுவும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டாலும்
தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றர்.