SuperTopAds

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் கமரா வசதியுடன் கூடிய கைத்தொலைபேசி பாவனைக்கு தடை..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் கமரா வசதியுடன் கூடிய கைத்தொலைபேசி பாவனைக்கு தடை..

2006ம் ஆண்டு மத்திய அரசின் சுற்று நிரூபத்திற்கு அமைய நோயாளர் பகுதியில் கமரா வசதிக ளுடன்கூடிய கைத் தொலைபேசிகள் பயன்படுத்த முடியாது என்பதனையே நடைமுறைப்படுத்துகின்றோம். 

என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் , தாதியர்கள்  மற்றும் ஊழியர்கள் கடமை நேரம் சிமாட் வகை கைத் தொலைபேசிகள் பாவனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் 

கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

வைத்தியசாலையில் பணியாற்றும் பணிப்பாளராகிய நான் உட்பட நோயாளர்களின் தேவையை பூர்த்தி செய்யவே நியமிக்கப்பட்டுள்ளோம். அந்த வகையில் நோயாளர்  விடுதிகளில் பணிப்பாளர் உட்பட எவருமே சிமாட் வகை கைத் தொலைபேசிகளை 

பயன் படுத்த முடியாது என்பது மத்திய சுகாதார அமைச்சர் 2006ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட சுற்று நிரூபம் சொல்கின்றது. அதனையே தற்போது நடைமுறைப் படுத்துகின்றோம்

அதேநேரம் நோயாளர்களுடன்  தொடர்புடைய கடமைக்கு தொடர்பான எவருமே  பயன்படுத்த முடியாது எனக் கூறியுள்ளோம். இதில் எந்த தராதர பாகுபாடும் கிடையாது. என்றார் .