11 ஆயிரத்து 100 மில்லியன் ரூபாய் செலவில் பாலியாறு, பறங்கியாறு நீா்ப்பாசன திட்டங்கள் விரைவில் ஆரம்பம்..
பறங்கியாறு திட்டம் 2 ஆயிரத்து 100 மில்லியன் ரூபாவிலும், பாலியாறுத் திட்டம் 9 ஆயிரம் மில்லியன் ரூபாவிலும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் மீள்குடியேற்றச் செயலணிக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு , கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிற்கான குடிநீர்த் திட்டத்திற்காக குறித்த இரு திட்டங்களையும் முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதி தலமையிலான அபிவிருத்திச் செயலணியின் 2வது கூட்டத்தில் முன்மொழியப்பட்டது.
இவ்வாறு முன்மொழியப்பட்ட திட்டங்களின். முன்னேற்றம் தொடர்பில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் வழங்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த இரு திட்டங்கள் தொடர்பிலும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை
மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக சாத்தியக் கூறு அறிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதோடு ஓர் திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் இடம்பெறுகின்றது. இவ்வாறு மேற்கொள்ளும் பாரிய திட்டங்களிற்காக நிதி பெற்றுக்கொள்வதற்கான
சாத்தியப்பாட்டினையும் ஆராய்ந்துள்ளதாகவும் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இத் திட்டங்களிற்கான நிதியினை பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டு அமைச்சின் ஊடாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியினை நாடி அதன் மீலம் நிதியினைப்
பெற்று நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.