கிளிநொச்சியில் திருடப்பட்ட பெருமளவு கைத்தொலைபேசிகள் புதுக்குடியிருப்பில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்பு..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் திருடப்பட்ட பெருமளவு கைத்தொலைபேசிகள் புதுக்குடியிருப்பில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்பு..

கிளிநொச்சியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து அங்கிருந்து திருடப்பட்ட கைத்தொலை பேசிகள் புதுக்குடியிருப்பில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

திருட்டு  சம்பவத்தின் போது சி.சி.ரி.வி.யில் பதிவான காட்சிகளை ஆதரமாக வைத்துக்கொண்டு கிளிநொச்சி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 

சந்தேச நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நிலத்திற்கு கீழ் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்தொலைப்பேசிகள் 43, 

சாச்சர்கள் 10, கடையின் கதவை உடைப்பதற்கு பயன்டுத்தப்பட்ட அலவாங்கு என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக 

கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு