முல்லைத்தீவு கடலில் மிதந்துவந்த தமிழீழ விடுதலை புலிகளின் கொடி..
முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் இரண்டு புலிக்கொடிகள் கடல்அலை சீற்றத்தினால் கடலுக்குள் இருந்து இன்று காலை கரை ஒதுங்கியுள்ளன.
செல்வபுரம் கடற்கரைப்பகுதியில் கடல் சீற்றம் காரணமாக கடலுக்குள் புதைந்த கழிவு பொருட்கள் கரையொதுங்கியுள்ள இதன்போது காலணிகள்,
உடைககள்,இரும்புகள்,உரபைகள்,என பல பொருட்கள் கரை ஒதுங்கி வருவதுடன் கடல் அட்டைகளும் கரை ஒதுங்கி வருகின்றன.
இன்னிலையில் பிரதேச மீனவர்கள் கடல் அட்டைகளை பொறுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இதன்பொது கடல் அலைக்குள் இருந்து ஒரு இரண்டு அடி நீளம் கொண் புலிக்கொடி
ஒன்று கரை ஒதுங்கியுள்ளது இதனை அருகில் இருந்த மீனவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன் தகவல் அறிந்து வந்த படையிரின் புலனாய்வாளர்கள் அதனை எடுத்து சென்றுள்ளார்கள்.
அதன் பின்னர் காலை 9.00 மணியளவில் மீனவர்கள் கடல் அட்டை பொறுக்கி கொண்டு இருந்த வேளை நான்கு அடி நீளம் கொண்ட புலிக்கொடி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இரண்டு கொடிகளும் புதிய கொடிகளாகவே கணப்பட்டுள்ளன தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலீசார் அந்த கொடியினைஎடுத்து சென்றுள்ளதுடன்
படைபுலனாய்வாளர்கள் எடுத்து சென்ற கொடியினையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்