இந்திய மீனவா்கள் 8 போ் இலங்கை கடற்படையினால் கைது..

ஆசிரியர் - Editor I
இந்திய மீனவா்கள் 8 போ் இலங்கை கடற்படையினால் கைது..

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த எட்டு மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

இராமேஸ்வரம் பாம்பன் , ஜெகதாப்பட்டினம் பகுதியை  சேர்ந்த எட்டு மீனவர்களும் நேற்றிரவு நெடுந்தீவு , கடற்பரப்பினுள் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களையும் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் கடற்படையினர் இன்று மதியம் ஒப்படைத்துள்ளனர். 

எட்டு மீனவர்களையும் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுதுவதற்க்கான நடவடிக்கைகளை நீரியல் வளத்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 

நாட்டில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் , அவர்களை கடற்படையினர் கட்டுப்படுத்த வில்லை எனவும் , 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடமாகாணத்தை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் வடமாகாண ஆளுனரை நேரில் சந்தித்து முறையிட்டு இருந்தனர். 

அது தொடர்பில் தான் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு உறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு