போா்க்குற்றங்களுக்கு நீதியை பெற விரும்பினால் சா்வதேச சட்டத்துறை அல்லது நீதி துறையின் தலையீடு அத்தியாவசியமானது..
இலங்கையில் இடம்பெற்ற போா்க்குற்றங்களுக்கு நாம் நீதியை அல்லது நியாயத்தை எதிா்பாா்த்தால் சா்வதே ச சட்டத்துறை அல்லது நீதி துறையில் உள்நுழைவு அத்தியாவசியமானது.
மேற்கண்டவாறு முன்னாள் வடமாகாண முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளாா். அவரது வாராந்த கேள்வி பதிலிலேயே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.
இது குறித்து மேலும் அவா் கூறியுள்ளதாவது.
நீதித்துறை தற்போது சிறந்த தீர்ப்புக்களைத் வழங்கி வருகிறது. எனவே உள்நாட்டு நீதிபதிகள் குழாம் யுத்தக் குற்ற விசாரணைகளை நடாத்தலாம் என்றும் வெளிநாட்டு உள்ளீடுகள் தேவையற்றது என்றும்
கூறப்படுகிறமை தொடர்பில், சீ வி விக்னேஸ்வரனிடம் வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசியல் யாப்புபற்றிய பிணக்கு எழும்போது நீதியுடன் நடந்துகொள்ளும் நீதியரசர்கள்
அல்லது நீதிபதிகள் இனரீதியான விடயங்கள் எழும் போது நீதியை நிலைநாட்டுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.