SuperTopAds

வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.

ஆசிரியர் - Editor I
வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை சவாலுக்கு உட்படுத்திய தீா்ப்பு வெளியான நாள் இந்த நாளாகும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா். 

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றம் சற்று முன்னர் வழங்கிய தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஒரு அதிகாரம் அரசியல் அமைப்பின் 19ஆம் சீர்த்திருத்தத்திற்கு முன்னர் இருந்தது.

எனினும் 19ஆம் சீர்த்திருத்தத்தின் பின்னர் அந்த அதிகாரம் அவருக்கு இல்லை.

ஜனாதிபதியின் முடிவினை சவாலுக்கு உட்படுத்தி முதலாவதும், முக்கியமானதுமான தீர்ப்பு இது.

அத்துடன் ஏழு நீதியரசர்களும் ஒருமித்த முடிவினை எடுத்துள்ளதுடன், ஜனாதிபதியின் முடிவு சட்ட வலுவற்றது எனவும் நீதியரசர்கள் அறிவித்துள்ளனர் என சுமந்திரன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.