“சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்” எனும் மகுடத்துடன் ஈ.பி.டி.பியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை!
“சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்” என்ற பிரதான மகுடத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் நாளை(27) வெளிவருகின்றது.
உள்ளூராட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் நடைமுறைக்கு சாத்தியமானதாகவும் யதார்த்தமானதாகவும் அமையப்பெற்று வெளியிடப்பட்டு வருகின்றமை விஷேட அம்சமாகும்
அந்தவகையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்த்கான தேர்தல் விஞ்ஞாபனம் உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணத்தில் அமைந்தள்ள கட்சியின் தலைமையகத்தில் வெளிளிட்டுவைக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது
வெளியிடப்படவுள்ள கட்சியின் தர்தல் விஞ்ஞாபனம் அரசியல் அவதானிகளினதும் கல்விமான்களினதும் சமூகநலன்விரும்பிகளினதும் ஊடகங்களினதும் பலத்தை எதிர்பார்ப்பகளுக்க மத்தியில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.