SuperTopAds

தமிழீழ விடுதலை புலிகள் பாதுகாத்த இரணைமடு குளம் இன்று அரசியல் குளமாக மாறியுள்ளது..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் பாதுகாத்த இரணைமடு குளம் இன்று அரசியல் குளமாக மாறியுள்ளது..

போர்க் காலத்­தில், இர­ணை­ம­டுக் குளக்­கட்­டா­னது பல­மி­ழந்து, உடைப்­பெ­டுக்­கும் நிலை­யில், 20அடிக்­குச் சற்று அதி­க­மான கொள்ளளவு உடைய தண்­ணீ­ரையே மறித்து வைக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது. 

அதன் கட்­டுப் பல­மி­ழந்து இருந்­த­தால், அது தாங்­கக்­கூ­டி­ய­ளவு நீர் நிறைந்­த­தும் உட­ன­டி­யாக வான் கத­வு­க­ளைத் திறந்து விடு­வதே நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளத்­துக்கு அப்­போது இருந்த ஒரே தீர்வு. ஒரு பைக்­கெற்­றுச் சீமெந்­தைக்­கூ­டப் பெற முடி­யாத நிலை­யில் 

பொரு­ளா­தா­ரத் தடை இறுக்­க­மாக இருந்­தது. மழை அதி­க­மா­கப் பெய்து நீர்க் கொள்­ள­ளவு அதி­க­ரித்­தி­ருந்த ஒரு சூழ­லில் குளத்­தின் வான் கதவை உட­ன­டி­யா­கத் திறந்து நீரை வெளி­யேற்ற வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 

ஆனால், வான் கத­வின் அடி­யில் சங்­கி­லி­யு­டன் இணைக்­கப்­பட்­டி­ருந்த, இரும்பு ஆணி ஒன்று கழன்று விட்­ட­தால் வான் கத­வைத் திறப்­பது சாத்­தி­யப்­ப­ட­வில்லை.

பெண் போரா­ளி­க­ளின்  துணி­க­ரச் செயல்
வான்­க­த­வைத் திறப்­ப­தற்கு நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளம் பல முயற்­சி­களை முன்­னெ­டுத்­தும் அது முடி­யா­மல் போனது. இத­னால், விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் கடற்­பு­லி­க­ளி­டம் சுழி­யோடி ஒரு­வரை இதைச் சீர்­செய்­யும் வேலை­யைச் செய்து தரு­வ­தற்­குத் தந்­து­த­வு­மாறு கோரப்­பட்­டது. 

கடற்­பு­லி­க­ளும் அதை ஏற்று ஒரு சில நிமி­டங்­க­ளில் இரண்டு பெண் போரா­ளி­களை அனுப்­பி­யி­ருக்­கி­றார்­கள். அதில் ஒரு பெண் போராளி நீச்­சல் உப­க­ர­ணங்­களை அணிந்து கொண்டு நீரில் குதித்து உள்ளே போய்ப் பார்த்­து­விட்டு வெளியே வந்து குறிப்­பிட்ட ஆணி­தான் வான் கத­வைத் திறக்­க­மு­டி­யா­ம­லி­ருப்­ப­தற்­குக் கார­ணம் என்­பதை உறுதி செய்து, 

நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளத்­தின­ ரைக்­கொண்டு அந்த ஆணியை உட­ன­டி­யா­கத் தரு­வித்து மறு­ப­டி­யும் நீருக்­குள் புகுந்து சென்று சில நிமி­டங்­க­ளில் அதைப் பூட்­டிச் சீர் செய்­தி­ருந்­தார். உட­ன­டி­யாக வான்­க­த­வைத் திறந்து பெருக்­கெ­டுத்து வரும் தண்­ணீ­ரில் இருந்து குளக்­கட்­டுப் பாது­காக்­கப்­பட்­டது. 

அன்று கடற்­பு­லி­க­ளின் சுழி­யோ­டிப் போரா­ளி­கள் அந்­தப் பணியை நிறை­வேற்­றி­ய­தால் இர­ணை­ம­டுக்­கு­ளக் கட்­டில் ஏற்­ப­ட­வி­ருந்த இடர் தடுத்து நிறுத்­தப்­பட்­டது.

போராட்ட வர­லாற்­றில் இர­ணை­மடு
தமி­ழீ­ழப் போராட்ட வர­லாற்­றில் இர­ணை­ம­டுக்­கு­ளத்­துக்­கும் அதை அண்­மித்த பெருங்­காட்­டுக்­கும் முக்­கிய இட­முண்டு. புலி­க­ளின் மதி­யு­ரை­ஞர் அன்­ரன் பால­சிங்­க­மும் அவ­ரது துணை­வி­யா­ரும் கொழும்பு வானூர்தி நிலை­யம் ஊடாக உள்­நாட்­டுக்­குள் கால் பதிக்க முடி­யாத நிலை அப்­போது இருந்­தது.

அந்­தச் சூழ­லில் ஐரோப்­பா­வில் இருந்து அவர்­கள் இரு­வ­ரும் மாலை­தீ­வுக்­குச் சென்று, அங்­கி­ருந்து தண்­ணீ­ரில் இறங்­கக்­கூ­டிய சீப்­பி­ளேன் ஒன்­றின் உத­வி­யு­டன் இர­ணை­ம­டுக்­கு­ளத்­தில் வந்­தி­றங்­கி­னார்­கள். அவர்­கள் தரை­யி­றங்­கிய பகுதி்க்கு விரைந்த தலை­வர் பிர­பா­க­ரன் பட­கி­லி­ருந்து கைலாகு கொடுத்து அவர்­க­ளைக் கரை­யேற்­றி­யி­ருந்­தார்.

விடு­த­லைப் புலி­க­ளின் இர­க­சிய விமா­னத் தள­மும் இர­ணைம­டுக் காட்­டுப் பகு­திக்­குள்­ளேயே உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது என்­ப­தும் பின்­னர் வெளிப்­பட்ட விட­யங்­க­ளாக இருக்­கின்­றன. இப்­ப­டி­யா­கப் புலி­க­ளால், கேந்­திர முக்­கி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த இர­ணை­ம­டுக் காட்­டை­யும் குளத்­தை­யும் புலி­க­ளி­ட­மி­ருந்து மீட்­டமை என்­பது சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளைப் பொறுத்­த­வரை சாத­னை­தான்.

போரின் பின்­ன­ரான மாற்­றம்

2010ஆம் ஆண்­டின் பின் இர­ணை­ம­டுக்­குள விட­யத்­தில் பல புதி­னங்­கள் நடந்­தே­றின. மகிந்த அரசு போரை வெற்றி கொண்ட பிறகு முதல் தட­வை­யாக அதைச் சூழ்ந்த பிர­தே­சங்­க­ளில், நெற்­செய்கை மேற்­கொள்­ளப்­பட்டு 2011ஆம் ஆண்டு அறு­வடை விழா ஒன்று கிளி­நொச்சி– உருத்­தி­ர­பு­ரத்­தில் 

நடத்­தப்­பட்­டி­ருந்­தது. அந்த விழா­வுக்கு அப்­போ­தைய பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சர் பசில் ராஜ­பக்ச வருகை தந்­தார். இரண்டு கிலோ மீற்­றர்­கள் நீள­மு­டை­யது இதன் கட்டு. நீரேந்து பகுதி, நீள் வட்ட அமைப்­பில் முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்­குள்ளே காணப்­ப­டு­கின்­றது. 

இதன் கொள்­ள­வான 36அடி நீரைத் தேக்க முடி­யாத நிலை நீண்ட கால­மா­கக் காணப்­பட்டு வந்­தது. தற்­போது அந்த இலக்கு நிறை­வு­ செய்­யப்­பட்டு அதற்­கு­ரிய வான் கதவை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன திறந்து வைத்­துள்­ளார். வான் கத­வைத் திறந்­து­ விட்டு அங்கு உரை­யாற்­றிய அரச தலை­வர் 

‘’வடக்­குக்­கான மிகப் பெரிய நீர்த் தேக்­கத்தை மக்­க­ளி­டம் கைய­ளித்­த­தில் மகிழ்ச்சி அடை­கி­றேன். இந்­தச் சூழலை ஏற்­ப­டுத்­தித் தந்த முப்­ப­டை­ க­ளுக்­கும் நன்­றி­கூ­று­வ­தற்­குக் கட­மைப்­பட்­டுள்­ளேன்.’’ என­வும் ‘‘இந்த முழு­மைப்­ப­டுத்­தப்­பட்ட இர­ணை­மடு நீர்த்­தேக்­க­மா­னது வடக்­குக்­கான நல்­லி­ணக்­கத்­தைப் 

பலப்­ப­டுத்த உத­வும்’’ என்­றும் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

மக்­க­ளைக் கவ­னிக்­கா­மல்  அர­சி­யல் நிகழ்த்­தப்­ப­டு­கி­றது
இர­ணை­ம­டுக்­கு­ளம் புலி­க­ளின் முக்­கி­ய­ மான ஒரு மையமாக இருந்­தது. புலி­கள் அழிக்­கப்­பட்­ட­தன் பின்­னர் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும் ஏனைய தமிழ்த் தலை­வர்­க­ளுக்­கும் முக்­கி­ய­மா­ன­தா­கக் காணப்­பட்­டது. தற்­போது அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு முக்­கி­ய­ம­தா­ன­தாக இருக்­கி­றது. 

பிற்­பட்­ட­ வர்­க­ளின் நோக்கு நிலை­க­ளில் கிளி­நொச்சி மக்­க­ளின் விவ­சா­யம் என்­ப­தாக அர­சி­யலே முன்­னி­ றுத்­தப்­ப­டு­கி­றது. மாத்­தளை -– மொற­ஹா­கந்த நீர்த் தேக்­கத்­தி­லி­ருந்து வறட்­சி­யான காலங்­க­ளில் இர­ணை­ம­டுக்­கு­ளத்­துக்கு நீரை ஊட்­டு­கின்ற வேலைத் திட்­டம் நடை­பெற்று வரும் நிலை­யில், இர­ணை­ம­டு­வின் வான் கத­வு­க­ளைத் தானே வந்து திறந்து, 

அதற்­கான சான்­று­க­ளை­யும் நிறு­வி­விட்­டுச் சென்றுள்­ள­மை­யா­னது இது­வரை மாகாண நீர்த்­தேக்­கமாக இருந்த இர­ணை­ம­டுக் குளத்­தைத் தேசிய நீர்த்­தேக்­க மா­கத் திரு ­நி­லைப்­ப­டுத்­தி­ய­ தா­க எடுத்­துக்­கொள்­வ­தற்கே வகை செய்­கி­றது. ஈழ­மக்­கள் ஜன­நா­ய­கக் கட்­சி­யைச் சார்ந்த சந்­தி­ர­கு­மார், 

டக்­ளஸ் தேவா­னந்தா ஆகி­யோ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பைச் சேர்ந்த சம்­பந்­தர், சிறீ­த­ரன், ஐங்­க­ர­நே­சன் ஆகி­யோ­ரும் வட­மா­காண முன்­னாள் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ ­ரன் எனப்­ப­ல­ரும் இர­ணை­ம­டு­வின் இந்த வான் கத­வு­களை 2010ஆம் ஆண்­டின் பின்­பான காலத்­தில் தமது அர­சி­யல் தேவை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தி­யி­ருந்­த­னர். 

தற்­போது அரச தலை­வர் இந்த வான்­க­த­வு­க­ளைத் திறந்து விட்­டது என்­பது வேறொரு பரி­மா­ணத்தை அதா­வது தேசிய பரி­மா­ணத்­தைப் பெற்­றி­ருக்­கி­றது.

போர் இடம்­பெற்ற காலத்­தில், இந்­தக் குளத்­தின் வான்­க­த­வு­களை, பிரதி நீர்ப்­பா­ச­னப் பணிப்­பா­ளர், நீர்ப்­பா­ச­னப் பொறி­யி­ய­லா­ளர், கமக்­கா­ரர் அமைப்­பி­னர் எனப் பல­ரும் அவ­தா­னித்து அதற்­குப் பொறுப்­பான ஊழி­யர்­க­ளால் அந்­தக் கத­வு­க­ளைத் திறந்­து வி­டு­வதே வழ­மை­யாக இருந்து வந்­தது.

அப்­போது அவர்­கள் மிகச் சாதா­ர­ண­மாக மேற்­கொண்ட பணி­யைத் தற்­போது மாகா­ண­சபை, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், அரச தலை­வர் எனப் படம் காட்­டித் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. எது எவ்­வா­றி­ருப்­பி­னும் அரச தலை­வர் குள வேலையை முழு­மைப்­ப­டுத்தி மக்­க­ளி­டம் கைய­ளித்­தது என்­பது தேசிய நீர்ப்­பா­ச­ னத் திட்­டத்­துக்­குள் உள்­ள­டக்­கப்­ப­ட­வி­ருக்­கும் பெரிய நட­வ­டிக்கை ஒன்­றின் முதல் படி

 என்­று­நோக்­கி­னல், அது தவ­றில்லை. இர­ணை­ம­டுக்­கு­ளம் கிளி­நொச்சி விவ­சா­யி­க­ளுக்கு நீர் வழங்­கு­வது என்­ப­தற்கு அப்­பால், ஒர் அர­சி­யல் குள­மா­க­வும் மாறி­யுள்­ளது.