தமிழ்த் தேசியப் பேரவை காரைநகரில் பிரச்சாரம்!

ஆசிரியர் - Admin
தமிழ்த் தேசியப் பேரவை காரைநகரில் பிரச்சாரம்!

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில், காரைநகர் பிரதேச சபைக்குப் hட்டியிடவுள்ள தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர்கள் நேற்று நத்ததர் தினத்தில் தமது பிரச்சாரத்தை காரைநகரில் ஆரம்பித்துள்ளனர்.

காரைநகர் கிழவன்காடு முருகன் ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அவர்களின் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பமாகின. 

தமிழ்த் தேசியப் பேரவையின் பங்காளிக் கட்சியான தமிழர் சம உரிமை இயக்கம் காரைநகர் தொகுதிக்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்துள்ளது. 

அரசியலில் பழுத்த அனுபவம் மிக்க வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவையில் களம் இறங்கியுள்ளனர். அவர்களோடு, இளமைத் துடிப்பும் ஆளுமையும் மிக்க இளைஞர்களும் மக்கள் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தந்தை செல்வநாயகம் காலத்தில் இருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து பணியாற்றிய இருவர் இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவையில், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் கடும் அதிருப்தியும் விரக்தியும் அடைந்துள்ள அவர்கள், இனிமேலும் அக்கட்சியின் தமிழர் விரோதப் போக்கை அனுமதிக்க முடியாது என்ற நிலையிலேயே தாங்கள் புதிய அரசியல் பயணம் ஒன்றில் தடம் பதித்துள்ளனர் எனக் கூறினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு