காங்கேயன்துறையில் இருந்து சிதம்பரத்திற்கு கப்பல் ஓடுமாவென்பது சிதம்பர ரகசியம்!

ஆசிரியர் - Admin
காங்கேயன்துறையில் இருந்து சிதம்பரத்திற்கு கப்பல் ஓடுமாவென்பது சிதம்பர ரகசியம்!

தமிழக சிதம்பரம் அருள்மிகு நடராசப் பெருமானுக்குத் திருவாதிரை நாள் நன்னீராட்டு நிகழ்விற்கு கப்பலில் காங்கேயன்துறையில் இருந்து வழிபாட்டுப் பயணத்துக்கு இந்திய இலங்கை அரசுகள் ஒப்புதல் தந்துள்ள போதும கப்பல் பற்றிய ஏற்பாடுகள் பற்றி தகவல் இல்லாதுள்ளது.

கப்பல் ஏற்பாடுகளைத் துரிதப்படுத்துமாறு கேட்க வடமாகாண ஆளுநரின் செயலர் இளங்கோவனையும், இந்தியத் துணைத்தூதர் நடராசனையும் இன்று செவ்வாய் காலை, யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை, இந்து சமயப் பேரவை, கொடிகாமம் சிவத்தொண்டர் பேரவை, மாவிட்டபுரம் அருள்மிகு கந்தசாமிகோயில் திருப்பணிச் சபை ஆகியவற்றின் செயலாளர்கள் , பொறுப்பாளர்கள் மறவன்புலவு க. சச்சிதானந்தனுடன் சென்று சந்தித்தனர்.

ஒரு வார காலமே உள்ளது. இடையில் பல நாள்கள் விடுப்பு நாள்கள். இன்னமும் கப்பல் ஏற்பாடுகள் முடிவாகவில்லை. ஒருவேளை கப்பல் புறப்படுமாயின் அடியார்களுக்குப் பயண ஆயத்தங்கள் தேவையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் போன ஆண்டு போல இம்முறையும் இலங்கை அரசு கப்பல் விவகாரத்தை எவ்வாறு கையாளப்போகின்றதென்பது தொடர்பில் பல தரப்புக்களும் ஆர்வம் கொண்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு