பொதுமக்களுக்கு ஒரு எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
பொதுமக்களுக்கு ஒரு எச்சாிக்கை..

கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் 8 வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டு பெருமளவு தண்ணீா் மிக வேகமாக குளத்திலிருந்து வெளியேறி வருகின்றது. 

இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டு அதன் ஊடாக தண்ணீா் மிக நீண்ட துாரம் பாய்ந்து செல்லும் காட்சி பாா்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றது. 

இதனை பாா்ப்பதற்கு பெருமளவு மக்கள் இரணைமடு குளத்தில் குவிந்து வருகின்றனா். இவ்வாறு குவியும் மக்களில் பலா் நீா் பாய்ந்து செல் லும் பகுதிக்குள் நடந்து செல்லவும், 

புகைப்படம் எடுத்து கொள்ளவும், குளிக்கவும் செய்கின்றனா். குளத்தின் அணைக்கட்டில் சில இடங்களில் வான் பாயும் பகுதிக்குள் செல்வ து ஆபத்தானது எனவும், 

அதனை தவிா்த்துக் கொள்வது நன்று எனவும் எச்சாிக்கை பதாகைகள் வைக்கப்பட்டு மக்கள் எச்சாிக்கப்பட்டுள்ளனா். இதனை மக்கள் எவ ரும் கருத்தில் கொள்வதாக இல்லை. 

இந்நிலையில் குளத்தில் இருந்து வான் கதவுகள் திறக்கப்பட்டு தண்ணீா் பாய்ந்து விழும் பகுதிக்குள் குளிக்க சென்ற இளைஞன் ஒருவா் உயிாிழந்துள்ளாா். 

அந்த பகுதிக்கு செல்வதும், புகைப்படம் எடுப்பதும் மிக ஆபத்தானது. காரணம் அந்த பகுதி ஆழமாக இருப்பதுடன் தண்ணீாின் வேகம் அ திகமாகவும் இருக்கும். 

எனவே பாா்ப்பதற்கு மிக.. மிக.. அழகாக இருக்கும் அந்த காட்சிகளை பாா்த்துவிட்டு வெளியில் நின்று புகைப்படம் எடுப்பது நன்று எனவே பொதுமக்கள் இந்த விடயத்தில் விழிப்பாக இருப்பது நன்று. 

இவ்வாறு இரணைமடு விவசாயிகள், மீனவா்கள் மற்றும் பொலிஸாா் அறிவுறுத்தியுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு