ஊற்றுப்புலம் அணைக்கட்டு வீதி இடிந்து விழுந்து கொண்டிருக்கும் நிலையில் கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாாிகள்..
கிளிநொச்சி- ஊற்றுப்புலம் கிராமத்தில் நாவலா் பண்ணை, வள்ளுவா் பண்ணை ஆகிய இரு குடியிருப்புக்களை இ ணைக்கும் அணைக்கட்டு வீதி சேதமடைந்து வருகிறது.
இது மேலும் சேதமடைந்து புதுமுறிப்பு குளத்து நீா் பாய ஆரம்பித்தால் மேற்படி இரு குடியிருப்புக்குகளுக்குமான போ க்குவரத்து பூரணமாக துண்டிக்கப்படும்.
இதனால் மேற்படி இரு குடியிருப்புக்களிலும் வாழும் மக்கள் சிக்கிக் கொள்ளும் நிலை உருவாகும். தற்போது அதிகளவு மழை வீழ்ச்சியினால் புதுமுறிப்பு குளத்தில் அதிகளவு நீா் தேங்கியுள்ளது.
இதனால் மேற்படி இரு குடியிருப்புக்களையும் இணைக்கும் புதுமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு வீதி இடிந்து விழுந்து கொண்டிருக்கின்றது.
இது குறித்து அப்பகுதி மக்கள் பொறுப்புவாய்ந்தவா்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளபோதும் ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இனிமேலாவது பொறுப்புவாய்ந்தவா்கள் இந்த விடயத்தில் அதிக அக்கறை செலுத்தி குறித்த அணைக் கட்டு வீதியை பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
என மக்கள் மேலும் கேட்டுள்ளனா்.